தலைவர் அவர்களே,
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன ஆள்புலத்தில் இடம்பெறும் மரணங்களுக்கான பின்னணி மற்றும் அழிவுகள், அத்துடன் இந்தப் பிராந்தியத்தில் நிலவும் வன்முறைகள் மற்றும் குழப்பத்திற்கு எதிராக இன்று மனித உரிமைகள் பேரவையினால் இந்த விஷேட அமர்வு கூட்டப்படுவதை நாங்கள் மிகவும் வருத்தத்துடன் நோக்குகின்றோம்.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன ஆள்புலத்தில் இருக்கின்ற பொது மக்களின் பாதுகாப்பு அதியுச்சமான கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதுடன், அவர்களது மனித உரிமைகள் மேம்படுத்தப்பட்டு, எல்லா சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பது முக்கியமானதாகும்.
வன்முறைகள் சுயமாக விரிவடையும் ஆற்றல் உடையன. அது அதன் வளர்ச்சியில் மேலதிக வன்முறைகளை தோற்றுவிப்பதால், குறித்த வன்மம் பொதுமக்களின் நம்பிக்கையை குறைவடையச் செய்து, பாரிய சமூகத்தின் மீட்சியை நலிவடையச் செய்கின்றது.
வன்முறைகளையும், வாழ்வதற்கான உரிமை மீறப்படுவதையும் முடிவுக்கு கொண்டு வந்து, அனைத்து நபர்களுக்குமான கௌரவத்தை தோற்றுவித்து, சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளிக்குமாறு நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுக்கின்றோம்.
எமது நோக்கின் பிரகாரம், பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு சமாதானம் மீள திரும்புமாக இருப்பின், வியாபித்திருக்கும் சவால்களுக்கான தீர்மானங்களை எதிர்பார்ப்பதற்கு ஏதுவான தெரிவாக கலந்துரையாடல் அமைகின்றது. இரண்டு அரசுகளுக்குமான தீர்வுகளின் அடிப்படைகளில் கலந்துரையாடலை முறையான கவனத்துடன் முன்னெடுத்தால், அதனை வெற்றிகரமாக ஆக்கிக் கொள்வதற்கான ஆற்றல் இராஜதந்திரம் மற்றும் அரசியல் தலைமைத்துவத்திற்கு இன்னும் காணப்படுகின்றது.
தலைவர் அவர்களே, நன்றி.