கொள்கைத் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாடு
கொள்கைத் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் மனித வள மேம்பாட்டு உதவிப் பிரிவு ஆகியவற்றை இணைத்தது கொள்கைத் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு 2019 இல் நிறுவப்பட்டது. ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல், சமகால, உலகளாவிய பொருத்தப்பாடு தொடர்பான பிரச்சினைகள் பற்றிய பகுப்பாய்வு, இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் குறிப்பிட்ட அம்சங்கள் குறித்த கொள்கைச் சுருக்கங்களை உருவாக்குதல் மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் நீண்டகால மூலோபாயத் திட்டமிடலுக்கு பங்களிக்கும் தற்போதைய கொள்கைகளை மதிப்பீடு செய்தல் ஆகியன இந்தப் பிரிவின் முக்கிய செயற்பாடாகும்.
இலங்கை வெளிநாட்டு சேவை அதிகாரிகள், வெளிநாடுகளில் பணிபுரிவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொழில் மேம்பாட்டுக்காக அமைச்சை ஒரு ‘கற்றல் இடமாக’ மாற்றும் நோக்கில் இலங்கை வெளிநாட்டு சேவை அதிகாரிகளின் திறன் அபிவிருத்தி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தப் பிரிவு அமைச்சின் மனிதவள மேம்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.