மத்திய கிழக்குப் பிரிவு
மத்திய கிழக்குப் பிராந்தியத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து இருதரப்பு அரசியல், பொருளாதார விடயங்கள் மற்றும் பலதரப்புப் பிரச்சினைகளை மத்திய கிழக்குப் பிரிவு ஒருங்கிணைக்கின்றது.
14 மத்திய கிழக்கு நாடுகளுடன் இலங்கை முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. (பஹ்ரைன் இராச்சியம், ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஈராக் குடியரசு, இஸ்ரேல் அரசு, ஜோர்தான் ஹாஷமைட் இராச்சியம், குவைத் அரசு, லெபனான் குடியரசு, ஓமான் சுல்தானேட், பலஸ்தீனம், கட்டார் அரசு, சவுதி அரேபியா, சிரிய அரபுக் குடியரசு, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் யெமன் குடியரசு).
இந்தப் பிராந்தியத்திலுள்ள 14 அரசுகளில், 11 வதிவிடத் தூதரகங்களையும் (மனாமா, தெஹ்ரான், பக்தாத், டெல் அவிவ், அம்மான், குவைத், பெய்ரூட், மஸ்கட், தோஹா, ரியாத் மற்றும் அபுதாபி), ரமல்லா நகரில் ஒரு பிரதிநிதி அலுவலகத்தையும் மற்றும் 2 உதவித் தூதரகங்களையும் (துபாய் மற்றும் ஜெத்தா) இலங்கை நிறுவியுள்ளது.
யெமன் மற்றும் சிரியா ஆகியன முறையே ஓமான் மற்றும் லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு அங்கீகாரம் பெற்றவையாகும்.
இஸ்ரேல் (ஜெருசலேம்), பலஸ்தீனம் (பெத்லகேம்), ஈராக் (குர்திஸ்தான்) மற்றும் சிரியா (குர்திஸ்தான்) ஆகிய நாடுகளில் 04 கௌரவ கொன்சல் பிரதிநிதிகள் உள்ளனர்.
ஈரானிலுள்ள இலங்கைத் தூதரகமானது அஸர்பைஜான் மற்றும் துர்க்மெனிஸ்தானுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள 08 மத்திய கிழக்குத் தூதரகங்கள் (ஈரான், ஈராக், குவைத், ஓமான், பலஸ்தீனம், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம்) மற்றும் புதுடில்லியிலுள்ள 06 மத்திய கிழக்குத் தூதரகங்களை (லெபனான், ஜோர்தான், இஸ்ரேல், சிரியா, யெமன், பஹ்ரைன்) இந்தப் பிரிவு ஒருங்கிணைக்கின்றது.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் 03 கௌரவ கொன்சல் பிரதிநிதிகள் (இஸ்ரேல், ஜோர்தான் மற்றும் யெமன்) கொழும்பில் உள்ளனர்.