ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகள் மற்றும் கடமைகள் பிரிவு
பல்தரப்பட்ட உறவுகளின் பின்னணியில், நியூயோர்க் மற்றும் ஜெனீவாவிலுள்ள இரண்டு நிரந்தரத் தூரகங்கள் மற்றும் வியன்னா, பரிஸ், ரோம், நைரோபி, பேங்கொக் மற்றும் ஹேக் ஆகிய இடங்களிலுள்ள ஆறு வதிவிடத் தூதரகங்கள் ஆகியன இந்தப் பிரிவின் கீழ் வருகின்றன. இலங்கையின் நலன்களை மேம்படுத்தி, பாதுகாப்பதற்காகவும், ஐ.நா. அமைப்புக்கள் மற்றும் நடைமுறைகளுக்குள் விதிமுறைகள் மற்றும் ஏனைய செயன்முறைகளை அமைப்பதற்கு பங்களிப்புச் செய்வதற்காகவும் இந்தப் பிரிவானது உள்நாட்டு வரிசை அமைச்சுக்கள் ஃ திணைக்களங்கள் மற்றும் முகவரமைப்புக்கள், இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஐ.நா. முகவர் நிலையங்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு அரச சாரா நிறுவனங்கள், சிவில் சமூகக் குழுக்களுடனும் மற்றும் வல்லுநர்களுடனும் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்படுகின்றது.
வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டான நலன்களை மேம்படுத்துவதில், ஒத்த எண்ணம் கொண்ட பிராந்தியக் குழுக்களான NAM, G-77 + சீனா மற்றும் G-21 உட்பட, ஐ.நா. வுடன் இலங்கை ஒத்துழைப்புடன் செயற்படுகின்றது.