Grace Asirwatham

திருமதிகிரேஸ் ஆசீர்வாதம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க செயலாளர்

சிரேஷ்ட இலங்கை வெளிநாட்டு சேவை அதிகாரியான கிரேஸ் ஆசீர்வாதம் அவர்கள் 2017 ஒக்டோபர் 17 ஆந் திகதியன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார அலுவல்கள் மற்றும் வர்த்தகப் பிரிவு, அரசியல் அலுவல்கள்(மேற்கு) மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க பிரிவுக்கான மேலதிக செயலாளராகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் அநேக சிரேட்ட பதவிகளையும் வகித்துள்ளார். இதற்கு முன்னதாக இவர் நெதர்லாந்து மற்றும் நேபாளத்திற்கான தூதுவராகச் சேவையாற்றியுள்ளார். மேலும் ஜேர்மனி மற்றும் பாகிஸ்தானிலுள்ள இலங்கைத் தூதரகங்களிலும் பதவி வகித்துள்ளார்.

திருமதி.ஆசீர்வாதம் அவர்கள் த ஹேய்க்கில் இரசாயன ஆயுதத் தடை ஸ்தாபனத்தின் பிரதி பணிப்பாளர் நாயகமாகவும் பதவி வகித்துள்ளார்.

Close