8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர மருந்துப்பொருட்களை ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் இலங்கை மக்களுக்கு நன்கொடை  வொஷிங்டன் டி.சி. யிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள  ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல்  ஆகியவற்றின் கூட்டு ஊடக வெளியீடு

8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர மருந்துப்பொருட்களை ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் இலங்கை மக்களுக்கு நன்கொடை  வொஷிங்டன் டி.சி. யிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள  ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல்  ஆகியவற்றின் கூட்டு ஊடக வெளியீடு

ஐக்கிய அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற உலகளாவிய மனிதாபிமான அமைப்பான ஹார்ட்டு ஹார்ட் இன்டர்நெஷனல், கடந்த மாதம் 908,547 அமெரிக்க டொலர் பெறுமதியிலான மருத்துவப் பொருட்களை வழங்கியது. இது 2022 ஜூலை 13ஆந் திகதி கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் மேலதிக விநியோகத்திற்காக பாதுகாப்பாக பெற்றுக்கொள்ளப்பட்டது. இதிலிருந்து முன்னேறி, மாண்புமிகு தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் இப்போது இலங்கை மக்களுக்கு அண்ணளவாக 8,222,898.78 அமெரிக்க டொலர் (அதாவது, ரூபா. 3,042,061,403.66) பெறுமதியிலான அவசர மருத்துவ உதவிக்கான இரண்டாவது வகையான நன்கொடைக்குத் தேவையான அனைத்து அரசாங்க அனுமதிகளையும் பெற்றுள்ளது. இந்த நன்கொடையில் இலங்கையில் பற்றாக்குறையாகவுள்ள மற்றும் அவசரமாகத் தேவைப்படும் அமொக்ஸிசிலின், பொட்டாசியம் குளோரைட்டு, பென்சிலின் மற்றும் வென்லாஃபாக்சின் போன்ற முக்கியமான வலி நிவாரணிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் விரிவான அளவு உள்ளடங்கும். இதுவரை, ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல், இலங்கைக்கு அவசர மருத்துவ உதவியாக 9,131,445.78 அமெரிக்க டொலர் (அதாவது, ரூபா. 3,378,178,366.311) மொத்த பங்களிப்பைச் செய்துள்ளது.

ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனலின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிம் கரோல் உடன் 2022  ஜூலை 20ஆந் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த நெருக்கடியான நிலையில் இலங்கை மக்களுக்கு தாராளமாக வழங்கிய நன்கொடைகளுக்காக ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனலுக்கு மாண்புமிகு தூதுவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கையின் சுகாதார அமைச்சு மற்றும் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், இரண்டாவது நன்கொடையானது கொழும்புக்கு ஐந்து தனித்தனி விமானங்களின் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளது. முதல் நன்கொடையைப் போலவே, அனைத்து செலவுகளும் ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் நிறுவனத்தால் ஏற்கப்படவுள்ள  அதே வேளை, சுகாதார அமைச்சு நன்கொடையை இலங்கை மக்களுக்கு எந்தக் கட்டணமும் இன்றி உடனடியாக விநியோகிக்கும்.

கன்சாஸ், லெனெக்சாவை தலைமையிடமாகக் கொண்ட ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல்,  ஆரோக்கியத்திற்கான அணுகலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் உலகளாவிய மனிதாபிமான அமைப்பாகும். 1992 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் மருத்துவ உதவி மற்றும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான பொருட்களை அமெரிக்காவிற்குள் உட்பட 130 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கியுள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இயற்கை அனர்த்தங்களுக்கு மருத்துவ நிவாரணம் வழங்குவதன் மூலமும் தன்னார்வலர்களை அணிதிரட்டுவதன் மூலமும் ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் பிரதிபலிக்கின்றது. இந்த அமைப்பு, 4 நட்சத்திர வழிசெலுத்துனர் தொண்டு நிறுவனம், பி.பி.பி. அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனம் போன்ற அந்தஸ்த்துக்களையுடைய 'பரோபகாரம் 400' இல் உள்ள அமைப்பாகும்.

இலங்கைத் தூதரகம்,                                                                                       ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல்,

வொஷிங்டன், டி.சி.                                                                                           கன்சாஸ்

2022 ஆகஸ்ட் 25

Please follow and like us:

Close