வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார்

வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார்

 

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2024 செப்டெம்பர் 25 அன்று அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இவர், 2022 மே 20 ஆம் திகதி முதல் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியுறவுச் சேவை அதிகாரியான செயலாளர் விஜேவர்தன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சில்    36 வருடங்கள் சேவை செய்துள்ளார். அவர் கொழும்பில் உள்ள வெளிநாட்டலுவல்கள்  அமைச்சு, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் பல பதவிகளை வகித்துள்ளார்.

பிரிட்டிஷ் செவ்னிங் புலமையாளரான, வெளியுறவு செயலாளர் விஜேவர்தன இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுத்தத்துவமானி பட்டம் பெற்றுள்ளதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம், மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 2024 செப்டம்பர் 25

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close