சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75வது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் வகையில், சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 2023 பிப்ரவரி 10ஆந் திகதி ஹோட்டல் ஐ.டி.சி. கிரேண்ட் சோழா, ராஜிந்திரா மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்வில் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். தமிழ்நாட்டின் மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார் விஷேட அதிதியாகக் கலந்து கொண்டார். இலங்கை நாட்டினதும், அதன் மக்களினதும் சௌபாக்கியத்திற்காகவும், இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகளுக்காகவும் அவர்கள் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டி. வெங்கடேஷ்வரனுடன் இணைந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சென்னையில் உள்ள இராஜதந்திரத் தூதரகங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், முன்னணி வர்த்தகப் பிரமுகர்கள், தென்னிந்தியாவில் உள்ள இலங்கை நட்புறவு சங்க உறுப்பினர்கள், தென்னிந்தியப் பிரபலங்கள் மற்றும் இலங்கையின் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் இலங்கை உற்பத்திகளை காட்சிப்படுத்தி, தென்னிந்தியாவில் இருந்து இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட இலங்கை உற்பத்திகள் மற்றும் சுற்றுலா, தேயிலை தொடர்பான ஊக்குவிப்புப் பொருட்கள் பங்கேற்பாளர்களிடையே விநியோகிக்கப்பட்டன. இலங்கை இரவு விருந்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்

சென்னை

2023 பிப்ரவரி 15

Please follow and like us:

Close