கடலில் மீட்கப்பட்ட 152 இலங்கைக் குடியேற்றவாசிகள் நாட்டிற்கு  மீள அழைத்துவரப்பட்டனர்

 கடலில் மீட்கப்பட்ட 152 இலங்கைக் குடியேற்றவாசிகள் நாட்டிற்கு  மீள அழைத்துவரப்பட்டனர்

2022 நவம்பர் 08ஆந் திகதி வியட்நாம் கடற்கரையில் படகு கவிழ்ந்தபோது அதிலிருந்து  மீட்கப்பட்ட 152 இலங்கைக் குடியேற்றவாசிகள் வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து பட்டய விமானம் மூலம் 2022 டிசம்பர் 27ஆந் திகதி தன்னார்வ மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நாடு திரும்புவதற்கு இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பும் உதவியது.

'ஒழுங்கற்ற இடம்பெயர்வுப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல நிறுவன முயற்சிகள் அவசியமாவதுடன், மீள நாடு திரும்பும் செயன்முறையை எளிதாக்கியமைக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு தனது பாராட்டுகளை இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு பதிவு செய்கின்ற அதே வேளையில், இலங்கை மற்றும் வியட்நாம் அரசாங்கங்கள், ஹானோயில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் கொழும்பு, ஹானோய் மற்றும் கானாவில் உள்ள இடம்பெயர்வுப் பணிகளுக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய குழுப்பணிக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்' என இலங்கை மற்றும் மாலைதீவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தூதுவர் சரத் தாஷ் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பிராந்திய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களுடன் இணைந்து, புலம்பெயர்ந்தோருக்கான மீட்பு முயற்சிகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஒருங்கிணைத்தது. 2022 நவம்பர் 08 முதல், வுங் டௌ நகரில் அமைந்துள்ள மூன்று வௌ;வேறு வியட்நாம் இராணுவ விடுதி வசதிகளில் மொத்தம் 302 புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மாதத்திற்கும் மேலாக, உணவு, மருத்துவ உதவி, சுகாதாரக் கருவிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் அனைவருக்குமான ஆலோசனை ஆதரவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்குவதை வியட்நாம் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து சர்வதேச குடியேற்ற அமைப்பு மற்றும் ஹானோயில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதி செய்தது. புலம்பெயர்வுக்கான இலங்கைக்கான சர்வதேச அமைப்பின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வியட்நாமிற்குச் சென்று மீட்கப்பட்ட அனைத்து புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்புப் பரிசோதனைகள் / பாதிப்பு மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக வியட்நாமிற்கு சென்றிருந்தது. புலம்பெயர்ந்தோருக்கு ஆரம்ப கொன்சியூலர் உதவி, அடிப்படை உணவு, பாவனையின் பின்னர் வீசும் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் கிடைப்பதை ஹானோயில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஹோ சி மின் நகரில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் எளிதாக்கியது.

வியட்நாம் அரசாங்கம் ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்பான இடத்தை வழங்குவதற்கும் கடலில் மீட்கப்பட்ட 302 பாதிக்கப்படக்கூடிய இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதற்குமான வியட்நாம் அரசாங்கத்தின் ஆதரவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு பாராட்டுகின்றன.

புலம்பெயர்ந்தோர் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் மீள நாடு திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 2022 டிசம்பர் 02ஆந் திகதி அரசாங்க நிறுவனங்கள் மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பிரதிநிதிகளுடன் பங்குதாரர் மட்டத்திலான கூட்டத்தைக் கூட்டியது.

மீட்கப்பட்ட 152 புலம்பெயர்ந்தோரை மீட்பதற்காக இலங்கைக்கான புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விசேட விமானம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள், வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வியட்நாம் அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.

கைவிடப்பட்ட புலம்பெயர்ந்தோரின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு நல்கிய உதவி, விசேட பட்டய விமானம் மூலம் திருப்பி அனுப்புதல், அவர்கள் தமது வீடுகளுக்குச் செல்லும் போக்குவரத்து மற்றும் இலங்கையில் அவர்களுக்கான விரிவான மீள் ஒருங்கிணைப்பு உதவிகள் ஆகியவற்றின் மொத்தப் பெறுமதி 600,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

முறையற்ற வழிகளில் எல்லைகளை கடக்க முயலும் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரை நாட்டிற்கு மீள அனுப்புதல் மற்றும் மீள் ஒருங்கிணைத்தல் நடவடிக்கைகளில் தாராளமாக தனது ஆதரவுகளை நல்கியமைக்காக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி நன்றிகளைத் தெரிவித்தார்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 டிசம்பர் 28

 

Please follow and like us:

Close