இலங்கையில் காணப்படும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம், தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்துடன் இணைந்து 2022 டிசம்பர் 20ஆந் திகதி சென்னையில் உள்ள தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் 'இலங்கையுடன் வணிகம் செய்தல்' வணிகக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது.
கூட்டத்தில் உரையாற்றிய தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.எம். அருண் மற்றும் செயலாளர் வினோத் சொலமன் ஆகியோர் பிரதி உயர்ஸ்தானிகரை அன்புடன் வரவேற்றதுடன் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை எடுத்துரைத்தனர்.
சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி வெங்கடேஷ்வரன், இலங்கையில் காணப்படும் சாத்தியமான முதலீட்டு வழிகள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் வசதிகள் மற்றும் ஊக்குவிப்புக்களை எடுத்துரைத்தார். அடுத்த ஆண்டு முதலீட்டாளர் குழுவை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆடைத்துறை, மருந்து, வாகனம், இலத்திரனியல் மற்றும் ஐடிஃபிபிஓ போன்ற பல்வேறு வணிக மற்றும் முதலீட்டுத் துறைகளைச் சேர்ந்த முப்பது வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
தேசத்தின் தென் பிராந்தியத்திற்கான சேவையில் நூறு ஆண்டுகால சிறப்புத்துவம் மற்றும் தொழில் துறையை நிறைவு செய்துள்ள தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம், இந்தியாவின் பழமையான, பெரிய மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகும்.
இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,
சென்னை
2022 டிசம்பர் 22