டைரோலில் புதிய கௌரவத் தூதுவர் நியமனம்

 டைரோலில் புதிய கௌரவத் தூதுவர் நியமனம்

இலங்கை அரசாங்கம், ஒஸ்ட்ரியக் குடியரசின் அரசாங்கத்தின் உடன்படிக்கையுடன், டைரோல்  பிராந்தியத்தில் இலங்கையின் கௌரவத் தூதுவராக கலாநிதி கிறிஸ்டியன் ஸ்டெப்பனை நியமித்துள்ளது.

டைரோல் கூட்டாட்சிப் பாராளுமன்றத்தின் துணைத் தலைவர் சோபியா கிர்ச்சர், டைரோலின்  துணை மேயர் மார்கஸ் லாசென்பெர்கர் மற்றும் டைரோலில் உள்ள உள்ளூர் அதிகாரிகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரிகள், உள்ளூர் அரசாங்க பிரதிநிதிகள், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் மருத்துவ விநியோகத் துறைகளின் பிரதிநிதிகள், வணிகத தொடர்புகள், ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உத்தியோகபூர்வ விழா டைரோலில் நடைபெற்றது.

உத்தியோகபூர்வ விழாவில் தூதுவர் மஜிந்த ஜயசிங்க  பேசுகையில், 1954ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இலங்கைக்கும் ஒஸ்ட்ரியாவிற்கும் இடையிலான நெருங்கிய நட்புறவுகளை நினைவுகூர்ந்தார். பிராந்தியத்தில் கௌரவத் தூதரகத்தை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தூதுவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கௌரவத் தூதுவரை சந்தித்தார். கிறிஸ்டியன் ஸ்டெப்பான், இலங்கைக்கும் ஒஸ்ட்ரியாவுக்கும் இடையிலான பன்முக இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதுடன், கௌரவத் தூதுவரின் நியமனம் இலங்கைக்கும் டைரோலுக்கும் இடையிலான நெருங்கிய வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சுற்றுலா, முதலீடு மற்றும் மக்களுடனான தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய புதிதாக நியமிக்கப்பட்ட கௌரவத் தூதுவர் கலாநிதி ஸ்டெப்பான்,  இலங்கைக்கு வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை ஈர்ப்பதற்காக டைரோல் பிராந்தியத்தில் இலங்கையை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினார். இலங்கை மற்றும் டைரோல் ஆகிய இரு நாடுகளிலும் நன்கு நிறுவப்பட்ட சுற்றுலாத் துறைகளை அவர் எடுத்துக்காட்டியதுடன், இத்துறையை மேலும் மேம்படுத்துவதற்கு ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கான சாத்தியத்தை வலியுறுத்தினார்.

மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் பொது-தனியார்  கூட்டுத் திட்டங்களில் முன்னணி ஆளுமையாக இருக்கும் கலாநிதி ஸ்டெப்பான் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகின்றார்.

டைரோலில் உள்ள கௌரவத் தூதுவர் ஒஸ்ட்ரியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின்  பணிகளுக்கு ஆதரவளித்து, ஒஸட்ரியாவில் உள்ள ஸ்டைரியா, கரிந்தியா, மற்றும் சால்ஸ்பர்க்கில் உள்ள கௌரவத் தூதுவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்.

டைரோலில் உள்ள புதிய கௌரவத் தூதரகத்தின் தொடர்பு விவரங்கள் பின்வருமாறு:

டைரோலில் உள்ள இலங்கையின் கௌரவ தூதுவர்,

வில்ஹெல்ம்-கிரேல்-ஸ்ட்ரேஸ் 23, இன்ஸ்ரக்

தொலைபேசி: +43 (0)577 88 99

மின்னஞ்சல்: tirol@honcon-slk.at

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

வியன்னா

2022 டிசம்பர் 13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close