IFTM TOP RESA, சர்வதேச மற்றும் பிரெஞ்சு பயணச் சந்தை 2022 இல் இலங்கை பங்கேற்பு

2022 செப்டெம்பர் 20 முதல் 22 வரை பிரான்சில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற IFTM TOP RESA, சர்வதேச மற்றும்  பிரெஞ்சு பயணச் சந்தை 2022 இல் இலங்கை உள்வரும் சுற்றுலாப் பயணிகளின் சங்கம் வெற்றிகரமாகப் பங்கேற்றது.

முதல் எட்டு மாதங்களில் இருந்து மொத்தமாக 28,235 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் பிரான்ஸ் இலங்கைக்கான ஐந்தாவது பெரிய ஆதார சந்தையாகத் திகழ்கின்றது. மிகவும் மதிப்புமிக்க சுற்றுலாக் கண்காட்சிகளில் ஒன்றான IFTM, உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களை ஈர்க்கின்றது. IFTM TOP RESA - 2022 இல் கிட்டத்தட்ட 200 இடங்கள், 1,700 தரநாமங்கள் மற்றும் 34,000 சுற்றுலா வல்லுநர்கள் பங்கேற்றனர்.

உள்வரும் சுற்றுலா நடத்துனவர்களின் இலங்கை சங்கத்தின் கொடியின் கீழ், இலங்கையைச் சேர்ந்த முன்னணி சுற்றுலா இயக்குனர்களான எய்ட்கன் ஸ்பென்ஸ் டிரவல்ஸ், ஆண்ட்ரூதி டிராவல் கம்பெனி, அதென்டிசிட்டிஸ் ஸ்ரீலங்கா, கன்னைசன்ஸ் டி செலான், ஜெட்விங் டிரவல்ஸ், லயன் ரோயல் டுவரிசம், லங்கா ஸ்போர்ட்ரீசன், வோக்கர்ஸ் டுவர்ஸ் மற்றும் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியோர் இலங்கைக் கூடாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

ஐரோப்பிய ஒன்றியப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின்  இலங்கைக்கு எதிரான பயண ஆலோசனைகளை தளர்த்தியுள்ள நிலையில், இந்தக் கண்காட்சியில் இலங்கையின் பங்கேற்பானது குறிப்பிடத்தக்கதும், சரியான நேரத்திலானதுமாகும். எனவே, இந்தக் கண்காட்சியிலான பிரதிநிதித்துவம் வரவிருக்கும் குளிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கின்றது.

பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகமவினால் இராஜதந்திர அதிகாரிகள், முன்னணி சுற்றுலா நிறுவனங்களின் உறுப்பினர்கள் மற்றும் பிரான்சில் உள்ள பயணத்துறை பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இலங்கைக் கூடாரம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. சுற்றுலா நடத்துனவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஊடக வலைப்பதிவாளர்கள் மற்றும் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள தொடர்புடைய பங்குதாரர்கள் மத்தியில் இந்தக் கூடாரம் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

பிரான்ஸ்.

2022 செப்டம்பர் 27

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close