பிரான்சின் சர்வதேச சுற்றுலா மற்றும் சுற்றுலா வர்த்தகக் கண்காட்சியான ஐ.எஃப்.டி.எம். டொப் ரெசா, பரிசின் போர்டே டி வேர்சைல்ஸ்ஸில் 2021 அக்டோபர் 05 - 08 வரை இடம்பெற்றது.
சுற்றுலா மற்றும் பயணத்தின் பல இலக்கு தொழில்முறை சந்'தையான ஐ.எஃப்.டி.எம். டொப் ரெசா, வணிகம், ஓய்வு, குழுக்கள், மைஸ் (சந்திப்புக்கள், ஊக்கத்தொகை, மாநாடு, கண்காட்சிகள்) போன்ற பயணத்திற்கான அனைத்து ஆதாரங்களையும் உள்ளடக்கியது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவப்படுத்தி, சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ. பிரசன்ன ரனதுங்க, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ. தாரக்க பாலசூரிய, சுற்றுலா அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஹெட்டியாராச்சி மற்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் தலைவர் திரு. அசோக் பத்திரகே, முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால, இராஜாங்க அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திருமதி. சாவித்ரி பானபொக்கே மற்றும் சுற்றுலா சபையிலிருந்து திரு. விராங்க பண்டார ஆகியோர் இந்தத் தொடக்க விழாவில் பங்கேற்றிருந்தனர்.
ஐ.எஃப்.டி.எம். டொப் ரெசா நியாயப்பிரமாணத்தை போர்டே டி வேர்சைல்ஸ்ஸில் சுற்றுலாத்துறைக்குப் பொறுப்பான இராஜாங்க செயலாளர் திரு. ஜீன்-பாப்டிஸ்ட் லீவாய்னே திறந்து வைத்ததுடன், அங்கு உலகம் முழுவதும் இருந்து பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்
சுற்றுலா சந்தையைப் பூர்த்தி செய்யும் ஒரு டிஜிட்டல் தளத்தை இந்த ஆண்டு அமைப்பாளர்கள் ஐ.எஃப்.டி.எம். க்கு அறிமுகப்படுத்துகின்றனர். இந்த இணையவழித் தீர்வானது அனைத்து 'இணையவழி' மாநாடுகள் மற்றும் கலந்துரையாடல்களிலும் 'பௌதீக' அல்லது ஒரு 'மெய்நிகர்' வழியில் பங்கேற்க முடியும்.
இலங்கை சுற்றுலா சபை போன்ற கண்காட்சியாளர்கள் பல இலங்கை ஹோட்டல் மற்றும் சுற்றுலா இயக்குனர்கள், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், வோக்கர்ஸ் டுவர்ஸ் லிமிடெட், சாந்தி அட்வென்சர் டுவர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் போன்றவற்றின் பங்கேற்புக்கு உதவியது.
பரிசில் உள்ள இலங்கைத் தூதரகத்திலிருந்து, இலங்கைத் தூதுவர் ஷானிகா ஹிம்புரேகம, இரண்டாம் செயலாளர் திருமதி. துலான்ஜி ஹேரத், மூன்றாம் செயலாளர் திரு. அமில திசாநாயக்க ஆகியோர் இலங்கைப் பிரதிநிதிகளுடன் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.
இலங்கை தூதரகம்,
பாரிஸ்
2021 அக்டோபர் 25