'ஜேர்மனிக்கான தொடக்கம்' - இலங்கையின் தொடக்க நிறுவனங்களுக்கான மெய்நிகர் மென்-இறங்கும் திட்டம்

 ‘ஜேர்மனிக்கான தொடக்கம்’ – இலங்கையின் தொடக்க நிறுவனங்களுக்கான மெய்நிகர் மென்-இறங்கும் திட்டம்


இலங்கையின் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களிடையே டிஜிட்டல் யுகத்தின் எதிர்கால வடிவமைப்பாளர்களைக் கண்டறிதல், அங்கீகரித்தல் மற்றும் இணைத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு சிறந்த வழிமுறையை வழங்குகி, இலங்கையின் தொடக்க நிறுவனங்களின் நுழைவை எளிதாக்கும் மெய்நிகர் மென்-இறங்கும் போட்டியான 'ஜேர்மனிக்கான தொடக்கம்', 2021ஆம் ஆண்டு பேர்லினில் நடைபெற்ற ஆசியா பெர்லின் உச்சிமாநாட்டின் போது ஜேர்மனியில் நடைபெற்றது.

ஆசிய பேர்லின் உச்சிமாநாடு 2021, 'தொடக்க நட்பு தேசத்தை நோக்கி' என்ற தொனிப்பொருளில், பேர்லினிலுள்ள என்பெக்ட், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் மற்றும் ஹட்ச் ஆகியவற்றுடன் இணைந்து ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் மாண்புமிகு மனோரி உனம்புவே மற்றும் எம்பெக்ட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஜான் லான்சென்மேயர் ஆகியோரின் வரவேற்புக் குறிப்புக்களுடன் கலப்பு வடிவத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் திரு. ஓஷத சேனாநாயக்க உரையாற்றினார்.

இந்த மென்-இறங்கும் முயற்சி, லட்சியகரமான தொடக்க நிறுவனங்கள் தமது தயாரிப்புக்கள் மற்றும் தீர்வுகளைக் காட்சிப்படுத்துவதற்கும், ஐரோப்பா முழுவதும் பல்வேறு சந்தைகளில் தமது சுயநிலைமையை உயர்த்துவதற்குமானதொரு துவக்கப் பலகையாகும். சர்வதேச தொடக்க நிறுவனங்களின் சுற்றுச்சூழல் கூட்டாண்மைகளின் வலிமை மற்றும் நம்பகத்தன்மையை சோதிக்கவும், தொழில்துறை, முதலீட்டாளர் மற்றும் சந்தை இணைப்புக்களை அணுகவும், துறை நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் மற்றும் சர்வதேச சந்தையை அடைந்து கொள்வதற்கான செயற்பாடுகளை அதிகரிக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சித் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், 'இந்த முக்கிய வாய்ப்புக்காக 34 விண்ணப்பங்களின் பிரதிபலிப்பைப் பெற்றுக் கொள்வது மகிழ்ச்சியளிப்பதுடன், இலங்கையின் தொழில்நுட்பத் துறையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் என்ற ஒட்டுமொத்த இலக்குக்கு பங்களிக்கும்' என தூதுவர் மனோரி உனம்புவே குறிப்பிட்டார்.

தூதரக நாள் நிகழ்வின் போது, ஏழு இறுதிப் போட்டியாளர்களான சென்ஸ் அக்ரோ, அலவி.ஐ, மெஜிக் பிட், நிஃப்ட்ரான், யுனிவர்சர், ப்ளூ லோட்டஸ் 360, மற்றும் ஷவுட் அவுட் ஆகியன திரு. சசீந்திர சமரரத்ன (ஐ.சி.டி.ஏ.), திரு. சித்தார்த் பாசின் (என்பெக்ட்), திருமதி. ரந்துல டி சில்வா (குட் லைஃப் ஓ) மற்றும் திரு. மைக் ரிச்சர்ட்சன் (ஆசியா பெர்லின்) ஆகியோரைக் கொண்டிருந்த ஜேர்மனி மற்றும் இலங்கையின் தொழில் வல்லுநர்கள் குழுவிற்கு தமது தீர்வுகளை வழங்கின.

தனித்துவமான கண்டுபிடிப்புக்களை வழங்கிய அலவி.ஐ, மெஜிக் பிட் மற்றும் சென்ஸ் அக்ரோ போன்ற 'ஜேர்மனிக்கான தொடக்கம்' வெற்றியாளர்கள், ஐரோப்பிய சந்தைகளை ஆராய்வதற்காக எம்பெக்ட் மற்றும் ஆசியா பேர்லின் நிதியுதவியுடன் 8 வார மெய்நிகர் மென்-இறங்கும் திட்டத்தை ஐரோப்பாவின் தொடக்க மையமான பெர்லினில் பெறுவார்கள்.

'அலவி.ஐ' என்பது ஒரு வணிகத்திலிருந்து வணிகத்திற்கான எஸ்..ஏ.ஏ.எஸ். பயன்பாடாவதுடன், வன்பொருள், மென்பொருள், கையடக்கத் தொலைபேசிப் பயன்பாடுகள், உள்ளடக்கம் மற்றும் பயிற்சித் திட்டங்களின் ஒருங்கிணைந்த தளத்தில் உள்ள உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்காக, இது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சில்லறை தர அடையாளங்களின் டிஜிட்டல் சந்தைப்படுத்துனர்களுக்கு தரவு அறிவியல் மற்றும் தகவல்களை வெற்றிகரமாக மேற்கொள்ள உதவுகின்றது.

'சென்ஸ் அக்ரோ' இன் டிஜிட்டல் விவசாய சுற்றுச்சூழல் அமைப்பு, சிறிய ரக விவசாயிகளுக்காக உள்ளுணர்வார்ந்த, அறிவார்ந்த, சுய-வளர்ச்சியடைந்த அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இது முழுமையான விவசாயத் துறையில் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் விவசாயத் தீர்வுகளை வழங்குகின்றது.

ஆசிய பேர்லின் உச்சிமாநாட்டின் தூதரக தினம், டிஜிட்டல் நோமெட் தூதுவர் திட்டம் - (NOMAD4LK) மற்றும் சமூக தொழில் முனைவோர் மாநாடு ஆகியவற்றை உள்ளடக்கியிருந்ததுடன், இது தொடக்க சூழல் அமைப்பை வலுப்படுத்தும் இலங்கையின் இலக்கை மேம்படுத்துகின்றது.

இலங்கைத் தூதரகம்,

பேர்லின்

2021 அக்டோபர் 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close