உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றிய நல்லிணக்கம் குறித்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவின்  வெளிநாட்டு அமைச்சர்கள் கந்துரையாடல்

 உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றிய நல்லிணக்கம் குறித்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவின்  வெளிநாட்டு அமைச்சர்கள் கந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வின் பக்க நிகழவாக, நியூயோர்க்கில் உள்ள தென்னாபிரிக்காவின்  நிரந்தரத் தூதரகத்தில் வைத்து தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி. நலேடி பண்டோர் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை இருதரப்பு சந்திப்புக்காக வரவேற்றார். வெளிநாட்டு அமைச்சருடன் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேயும் உடன் இணைந்திருந்தார்.

வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக வெளிநாட்டு அமைச்சர் பண்டோர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நட்பான இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்தார். தனது கலாநிதிக் கற்கைக்காக தென்னாபிரிக்கப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அரசியலமைப்புச் சட்டம் குறித்த தொடர் விளக்கக் கல்வியமர்வுகளை நடத்தியமை முதல் தென்னாபிரிக்காவுடனான தனது நீண்டகால தொடர்பை அமைச்சர் பீரிஸ் நினைவு கூர்ந்தார். தென்னாபிரிக்காவின் முன்னணி அமைச்சர் துல்லா ஓமர் மற்றும் நிறவெறி  அரசாங்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த முன்னணி நபர்களான ரோல்ஃப் மேயர் மற்றும் இப்ராஹிம் இப்ராஹிம் ஆகியோருடனான அவரது நெருங்கிய நட்பையும், உயர் மட்ட விஜயங்களையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார். மறைந்த ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வளமான அனுபவம், நல்லிணக்கம் மற்றும் உண்மை ஆகிய துறைகளிலான தனித்துவமான தென்னாபிரிக்காவின்  வரலாற்றை இலங்கை உன்னிப்பாகக் கவனித்ததாகவும், அவற்றின் பல அம்சங்கள் தென்னாபிரிக்காவின் சொந்தத் தேசிய அனுபவத்திற்கு குறிப்பிடத்தக்கவையாகும் என்றும் குறிப்பிட்ட இலங்கை, இந்த அனுபவத்தின் சில அம்சங்களை இலங்கை கவனமாகப் பிரதிபலித்ததாகத் தெரிவித்தார். இலங்கையின் சொந்த முயற்சிகள், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடு அலுவலகம், மோதலுக்குப் பிந்தைய அபிவிருத்தி மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அவர்களின் பங்களிப்புக் குறித்து அமைச்சர் பீரிஸ் தென்னாபிரிக்க வெளிநாட்டு அமைச்சருக்கு விளக்கினார்.

தனது அனுபவங்களையும், பாடங்களையும் மோதலுக்குப் பிந்தைய பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் தென்னாபிரிக்கா மகிழ்ச்சியடைவதாகவும், கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும்  இழப்பீடு, பொது மன்னிப்பு மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர்கள் தொடர்ந்து பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் பண்டோர் குறிப்பிட்டார்.

இரு தரப்புக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு  அமைச்சர் பீரிஸ் ஆபிரிக்க வெளிநாட்டு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார். தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்து, நெருக்கமான உறவுகளைப் புதுப்பிக்குமாறு அமைச்சர் பண்டோரா இலங்கையின் வெளிநாட்டு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார். இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான மற்றும் நெருங்கிய உறவு மற்றும் பல்தரப்பு அரங்கில் வழங்கப்பட்ட நெருக்கமான ஒத்துழைப்பை இரு அமைச்சர்களும் பாராட்டினர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 செப்டம்பர் 26

Please follow and like us:

Close