ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியாவிற்கான அமைச்சர் அஹ்மத் பிரபுவுடன் உரையாடிய வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியாவிற்கான அமைச்சர் அஹ்மத் பிரபுவுடன் உரையாடிய வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

2021 ஜூன் 17, வியாழக்கிழமை இடம்பெற்ற வீடியோ உரையாடலில், இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான வழிகளை ஆராய்வதற்கு ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் தாரிக் அஹ்மத் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஒப்புக் கொண்டுள்ளனர். இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் பரந்த பகுதிகளிலான இருதரப்பு ஈடுபாட்டின் பன்முகத் தன்மையை அவர்கள் வரவேற்றனர்.

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான உற்பத்தி, ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, காலநிலை மாற்றம், நிலையான அபிவிருத்தி, விஞ்ஞானம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் கோவிட்-19 தணிப்பு ஆகியன குறித்து அமைச்சர் குணவர்தன மற்றும் அஹ்மத் பிரபு கலந்துரையாடினர்.

நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றிலான இலங்கையின் முன்னேற்றம், 2021 ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்கான (சி.ஓ.பி. 26) ஈடுபாடு, பொதுநலவாய ஒத்துழைப்பு போன்ற விடயங்கள் குறித்தும் இந்தத் தொலைபேசி உரையாடலின் போது கலந்துரையாடப்பட்டன.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஜூன் 18

Please follow and like us:

Close