கொழும்புத் திட்டத்தின் 47வது ஆலோசனைக் குழு கூட்டம் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ. தினேஷ் குணவர்தன அவர்களின் தொடக்க உரை

கொழும்புத் திட்டத்தின் 47வது ஆலோசனைக் குழு கூட்டம் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ. தினேஷ் குணவர்தன அவர்களின் தொடக்க உரை

தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, 46வது சி.சி.எம். தலைவர் அவர்களே, தூதுக்குழுழுக்களின் தலைவர்களே, கொழும்புத் திட்டத்தின் பொதுச் செயலாளர் அவர்களே, சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களே மற்றும் பிரதிநிதிகளே, வெளியுறவுச் செயலாளர்  அட்மிரல் கொலம்பகே அவர்களே, மேன்மை தங்கியவர்களே, கனவானகளே மற்றும் கனவாட்டிகளே, நண்பர்களே.

மெய்நிகர் ரீதியாகவேனும் உண்மையில் உங்கள் அனைவருடனும் இங்கு இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது, இந்தக் காலத்தின் மகத்தான சவால்களைப் பொருட்படுத்தாமல் எங்களுடன் இருக்க நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி. கொழும்புத் திட்டத்தின் நோக்கத்தை முன்னெடுப்பதற்கான உங்களது உறுதிப்பாட்டின் தெளிவான சமிஞ்சை இதுவாகும். பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டில் உலகளாவிய காலநிலை இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதால், இன்றும் நாளையும் நாங்கள் சந்திப்பில ஈடுபடுவதானது சரியான நேரத்திலானதாகும். உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 40% அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 37 டிரில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்டிருப்பதால், எமது கூட்டான வலிமை இங்குதான் இருக்கின்றது மற்றும் எங்கிருந்து நம் உத்வேகத்தையும்  உந்துதலையும் பெற முடியும் என நான் நம்புகின்றேன்.

முன்னாள் சிலோன் (இலங்கை) பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கௌரவ டி.எஸ். சேனாநாயக்க அவர்களினால் தலைமை தாங்கப்பட்ட இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொதுநலவாய மாநாட்டில், 1951ஆம் ஆண்டு ஜூலை 01ஆந் திகதி ஏழு ஸ்தாபக உறுப்பினர்களால் (அவுஸ்திரேலியா, பிரித்தரியா, கனடா,  சிலோன் (இலங்கை), இந்தியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான்) கொழும்புத் திட்டம் உருவாக்கப்பட்டதுடன், இப்போது 27 உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.

இன்றும் நாளையும் எமது கலந்துரையாடல்கள் கொவிட்டுக்குப் பிந்தைய காலத்தில் கொழும்புத் திட்டத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்புப் பாதையை வடிவமைப்பதில் முக்கியமாகும். இந்த ஆலோசனைக் குழுக் கூட்டம், எமது கூட்டு நலனுக்காக முறையான மற்றும் பயனுள்ள திட்டங்களை செயற்படுத்துவதற்காக அறிவினைப் பகிர்தல், கண்டுபிடிப்பு  மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு மிகவும் பயனுள்ள தளமாக செயற்படும் என இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், கொழும்புத் திட்டத்திற்குள், நிலையான பசுமை நகரங்களை உருவாக்குதல் மற்றும்  பசுமையான இடங்களை அதிகரித்தல்; எனும் தலைப்பில், அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் 'பசுமை மற்றும் ஸ்மார்ட்' நகரங்கள் பற்றிய எமது அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையான 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை'யில் இலங்கை தலைமை வகிக்க முன்வருகின்றது.

கோவிட்-19 எதிர்பாராத பல சவால்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தொற்றுநோயால் பல வழிகளில் பாதிக்கப்படுகின்ற எமது சக உறுப்பு நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு எமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும். தொற்றுநோய் மற்றும் அதன் பரவலான தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அயராத முயற்சிகளுக்கு எமது சக உறுப்பு நாடுகள் பாராட்டப்பட வேண்டும். உலகின் ஒரு மூலையில் - எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அல்லது முக்கியமற்றதாகத் தோன்றினாலும் - உலகின் ஏனைய பகுதிகளுக்கு உலகளாவிய ரீதியில் ஒன்றோடொன்று இணைந்திருப்பது விருத்தியடையும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்துள்ளது. தொற்றுநோய் எமக்கு கற்றுக்கொடுத்த ஏதாவது இருந்தால், அது நாம் ஒன்றாக இருக்க வேண்டும், தொற்றுநோயை சமாளிக்க நாம் உலகளாவிய ரீதியாக சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என்பதாகும். எனவே, சர்வதேச ஒத்துழைப்பு, முன்னெப்போதையும் விட இன்று மிகவும் முக்கியமானது, இந்த சூழலில், கொழும்புத் திட்டம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகின் சவால்களை நாம் எதிர்கொள்ளும்போது, சமூகப் பொருளாதார  அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள் ஆகிய துறைகளில் எமது நிறுவனத்தின் பணி மற்றும் அனுபவம் வலிமைக்கு ஆதாரமாக இருக்கும். புதிய மற்றும் சவாலான உலகளாவிய சூழலில் சமூகப் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி வேலை செய்வதற்கான புதிய வழிகளுக்கு நாம் ஒன்றாக ஒத்துழைக்க வேண்டும்.

எமது அமைப்பின் காரணத்தின் வெற்றி அனைத்து உறுப்பு நாடுகளினதும் அர்ப்பணிப்பு, பங்களிப்பு மற்றும் அர்த்தமுள்ள செயலைப் பொறுத்தது. ஆனால் நாடுகளில் உள்ள சவால்கள் மற்றும் தனிப்பட்ட யதார்த்தங்கள் அவற்றின் பங்களிப்பை முழு அளவில் தடுக்கலாம். இது அதன் முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களுக்கு நிதி மற்றும் ஏனைய ஆதாரங்களைப் பெறுவதில் நிறுவனத்திற்கு சவாலாக உள்ளது. இந்தத் தடையானது, அதன் உறுப்பினர்களுக்கு சிறந்த ஆற்றலை வழங்குவதில் இருந்தும் நிறுவனத்திற்கு இடையூறு விளைவித்ததாக இலங்கை கவலை கொண்டுள்ளது. அபிவிருத்தியடைந்த உறுப்பு நாடுகள், கொழும்புத் திட்டத்திற்கான தமது மதிப்புமிக்க ஆதரவை தொடர்ந்தும் வழங்கி, அபிவிருத்தியடைந்து உறுப்பு நாடுகளுக்கான அர்த்தமுள்ள திட்டங்களை நிலைநிறுத்தி மேலும் மேம்படுத்துவதற்காக,  அனைவருக்கும் பகிரப்பட்ட செழிப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த சவாலான காலங்களில் நாம் செல்லும்போது முழுமையாக செயற்படும் செயலகமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. செயலகத்திற்கும் உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு முக்கியமானது. தொற்றுநோய் எம் அனைவரையும் பாதித்தது, யாரையும் விட்டுவைக்கவில்லை. எமது சர்வதேச நண்பர்கள் மற்றும் பங்காளிகளின் உதவியுடன் வலுவான தடுப்பூசி இயக்கத்தை செயற்படுத்த முடிந்ததில் இலங்கை மகிழ்ச்சியடைகின்றது.  உங்களில் பலர் உங்கள் கடமைகளைச் செய்யத் திரும்பிச் சென்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

நீடித்த பசுமை நகரங்கள்பசுமை இடைவெளிகளை அதிகரித்தல் என்ற ஒரு தலைப்பு குறித்து உரையாற்ற என்னை அனுமதிக்கவும், அது குறித்து காலையில் எமது நாட்டின் தலைப்புப் பத்திரத்தை முன்வைக்கும்போது விரிவாக  கலந்துரையாடப்படும்.

பசுமை இடங்களை அதிகரிப்பது உண்மையில் நகரங்களில் பசுமையை அதிகரிக்கவும், பசுமை நகரங்களை  உருவாக்கவும் மற்றும் சந்ததியினருக்கான அவற்றின் நிலைத்தன்மையை வலுப்படுத்தவும் பங்களிக்கின்றது. 14ஆம் நூற்றாண்டின் தென்கிழக்கு ஆசிய நகரங்களில் இலங்கைப் படைப்பாற்றலால் ஈர்க்கப்பட்ட நிலப்பரப்பு மாற்றங்கள் போன்ற எமது கடந்த காலத்திற்குரிய தனித்துவங்களை எமது நாட்டின் தலைப்புப் பத்திரம் பகிர்ந்து கொள்ளும் என நான் நம்புகின்றேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலக வரலாற்றில் முதன்முறையாக, உலகளாவிய நகர்ப்புற மக்கள் 2007 இல் கிராமப்புற மக்கள்தொகையை விஞ்சினார்கள். நகரமயமாக்கல், அல்லது மக்கள் நகரங்கள் மற்றும் பெருநகரங்களுக்கு இடம்பெயர்வதானது கடந்த 200 ஆண்டுகளில் நடந்த நிகழ்வு. மனிதகுல வரலாற்றின் சிறந்த பகுதிக்கு, மக்கள் குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமப்புறங்களில் வாழ்ந்தனர். 2050 களில் உலக மக்கள் தொகை 9.8 பில்லியனாக அதிகரிக்கும் என்றும், அந்த மக்கள்தொகையில் மூன்றில்  இரண்டு பங்கு, அதாவது 7 பில்லியன் மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்வார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை மற்றும் உலகளாவிய அபிவிருத்தி முயற்சிகளுடனான அதன் இணைப்பு, ஐக்கிய நாடுகள் உள்ளடக்கிய, பாதுகாப்பான, நெகிழக்கூடிய மற்றும் நிலையான நகரங்களை உருவாக்குதல் என்ற 2030 நிலையான  அபிவிருத்தி இலக்கு 11 இன் தனித்துவமான இலக்கை உருவாக்கியது.

உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நகர்ப்புறங்கள் 70 சதவிகிதத்திற்கு பங்களிப்பு செய்கின்றன. உலகளாவிய கார்பன் உமிழ்வில் சுமார் 70 சதவிகிதம், காற்று மாசுபாடு மோசமடைதல் மற்றும் 60 சதவிகித வளப் பயன்பாடு ஆகியவற்றிற்கும் அவை காரணமாகின்றன, ஏனெனில் நகர்ப்புற மக்கள் பெருகிவரும் உட்கட்டமைப்பு மற்றும்  பொது சேவைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்கள் மீது அழுத்தம் கொடுக்கின்றனர். விரைவான மற்றும் திட்டமிடப்படாத நகரமயமாக்கலும் சுற்றுச்சூழலின் சீரழிவுக்கு வழிவகுப்பதுடன், பசுமையான இடங்களை சுருக்குகின்றது.

சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் மக்கள்தொகையின் எதிர்மறையான விளைவுகளுக்கு உடனடியான நடவடிக்கைகள் அவசியமாவதுடன், இயற்கை அணுகலை ஊக்குவிப்பதற்கும், மாசுபாட்டைக் குறைப்பதற்கும், தீவிரமான  வானிலை நிலைகளைத் தணிப்பதற்கும், நிலையான வாழ்க்கை முறைகளை மேம்படுத்துவதற்கும் புதுமையான அணுகுமுறைகள் கோரப்படுகின்றன. தொற்றுநோய் அடர்த்தியான நகர்ப்புறங்களில் சூழ்நிலையின் ஈர்ப்பை அதிகரித்துள்ளதுடன், இயற்கை மற்றும் திறந்தவெளிகளுக்கான அணுகலின் முக்கியத்துவத்தை வீட்டிற்கு கொண்டு சென்றது.

விரைவான நகரமயமாக்கலுடன் சண்டையிடுவது உலகளாவிய தேவையாக இருந்தாலும், அதன் விளைவுகளின் தீவிரம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அவை தொடர்ந்தும் தொழில்நுட்பப் பிடியில் உள்ளனர். நிலையான நகரங்களை உருவாக்குவது முதலீட்டிற்கு அழைப்பு விடுக்கின்றது. எனவே, இந்த நாடுகளுக்கு திறன் அபிவிருத்தியை மேம்படுத்தவும், பசுமைத் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பை அணுகவும், வீட்டுவசதி, மின்சாரம், நீர், கழிவு மீள்சுழற்சி மற்றும் பொதுப் போக்குவரத்து  போன்ற நிலையான மற்றும் நம்பகமான பொதுச் சேவைகளை வடிவமைக்கவும் மேம்படுத்தவும் ஆதரவு மற்றும் வளங்கள் தேவை.

இலங்கையின் முன்னணி உலகளாவிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பேராசிரியர் ரணில் சேனாநாயக்க, பசுமை சூழல் காலநிலை கலந்துரையாடலில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை முன்மொழிகின்றார். நகர்ப்புறத் துறையே நாம் சுவாசிக்கும் காற்றின் உண்மையான நிலை என்பது அவருடைய கணிப்பாகும். கார், பஸ், ரயில், விமானம், தொழிற்சாலை அல்லது ஜெனரேட்டரில் பற்றவைக்கும் ஒவ்வொரு முறையும் ஒட்சிசன் எரிகின்றது. ஒட்சிசனின் மறு அறிமுகம் எமது  கிராமப்புற பசுமைப் பகுதிகளால் செய்யப்படுகின்றது. இதனால் எமது கவனம் ஒட்சிசனிலும் இருக்க வேண்டும்.

காலநிலை குறித்து ஐ.நா. எச்சரிக்கை மணி அடிக்கும் போது, நேர்மறையான சுற்றுச்சூழல் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டிய நாடுகளை நாம் அங்கீகரிப்பது முக்கியம். நிதிக் கடன் அல்லது சிரமத்தை ஈடுசெய்ய ஒரு நேர்மறையான வருமான வடிவத்தில் அங்கீகாரம் தேவை. அவர்களின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி,  நாம் உலகில் இன்னும் சுவாசிக்கின்றோம்.

இந்த வகையில், இளைஞர்களிடையே தலைமுறை மாற்றங்களின் இயக்கவியலின் போக்குகளை மனதில் வைத்துக்கொள்வது முக்கியம், அங்கு விரைவான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள் மூலம், முறைகள் புதுப்பிக்கப்பட்டு  குறுகிய காலத்திற்குள் மாற்றப்படுகின்றன.

எமது காலத்தின் சவால்களைச் சமாளிக்கவும், எமது பிராந்தியத்திற்கான சமூக மற்றும் பொருளாதார  செழிப்பைப் பெறவும் முயற்சிக்கும் அதே வேளையில் அமைப்பு வளர உதவுவதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

உங்கள் அனைவருக்கும் இரண்டு நாட்கள் பயனுள்ள விவாதம் மற்றும் கலந்துரையாடல் இடம்பெற வாழ்த்துகின் றேன்.

நன்றி!

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close