ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கை தேயிலை சபையின் உதவியுடன் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஃபுடெக்ஸ் கண்காட்சியில் 1400 க்கும் மேற்பட்ட உணவு தொடர்பான கூடங்களைக் கொண்டிருந்த 'சிலோன் டீ' யை காட்சிப்படுத்தியது.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர 25க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதுவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ஃபுடெக்ஸ் ஜப்பான் திறப்பு விழாவில் பங்கேற்று இலங்கை தேயிலை அரங்கைத் திறந்து வைத்தார். இந்தக் கண்காட்சியில் இடம்பெற்ற விருந்தினர்களில், உலகெங்கிலும் 1700 உணவகங்களை இயக்கும் எம்.ஓ.எஸ். பேர்கர் பிரன்சைஸின் கொள்வனவு பொது முகாமையாளரும் இணைந்து கொண்டார்.
இலங்கைக் கூடத்தில் டில்மா டீ, ஜோர்ஜ் ஸ்டூவர்ட்ஸ் டீ, நெல்சன் - ரான்ஃபுர் டீ, ஜெஃபர்ஜி பிரதர்ஸ் - ஜெஃப் டீ, செயம் டீ மற்றும் இலங்கை தேயிலை சபையின் பல கூடங்கள் அடங்கியிருந்தன. அனைத்து கண்காட்சியாளர்களும் தமது பல தயாரிப்புக்களின் நேரடி ஊடாடும் விளக்கக்காட்சிகளை வழங்கினர். பல வணிகக் கூட்டங்கள் நடைபெற்றதுடன், நான்கு நாட்களில் கண்காட்சியின் போது, எதிர்கால சில்லறை சங்கிலிகள், உணவகங்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து 600 க்கும் மேற்பட்ட விசாரணைக் கோரல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊழியர்களும் ஜப்பானிய தன்னார்வலர்களும் இணைந்து நடாத்திய தேயிலை சபையின் கூடம் தொடர்ச்சியான தேநீர் ருசிக்கும் வாய்ப்புக்களை வழங்கியதுடன், பார்வையாளர்களுக்கு 'சிலோன் டீ' குறித்த கல்வியை கற்பித்தது. முதன்மைச் செயலாளர் (வர்த்தகம்) கபில ஜே. குமார நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இலங்கைத் தூதரகம்
டோக்கியோ
2022 மார்ச் 16