4வது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் இலங்கை பிரதிநிதித்துவம்

 4வது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் இலங்கை பிரதிநிதித்துவம்

நான்காவது ஆசிய-பசிபிக் நீர் உச்சி மாநாடு பல ஆசிய- பசிபிக் நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2022 ஏப்ரல் 23ஆந் திகதி ஜப்பானின் குமாமோட்டோ நகரில் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'நிலையான வளர்ச்சிக்கான நீர்: சிறந்த நடைமுறைகள் மற்றும் அடுத்த தலைமுறை' ஆகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக உச்சிமாநாட்டின் அரச தலைவர்களுடன் உரையாற்றியதுடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைவருக்கும் சுத்தமான நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் உட்பட நீர் தொடர்பான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் தேசிய இலக்கு எனக் குறிப்பிட்டார். இந்த நெருக்கடியான காலப்பகுதியில் எமது பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் எமது நிலைபேறான முயற்சிகளுக்கான முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் நிதியுதவி, அத்துடன் பரந்த அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பிற்கான ஒத்துழைப்பை இலங்கை வரவேற்கிறது என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

உச்சிமாநாட்டின் தொடக்க விழா, ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ மற்றும் பேரரசி மசாகோ ஆகியோரால் காணொளி தொழில்நுட்பம் மூலம் சிறப்பாக நடைபெற்றது. உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஜப்பான் பிரதமர் ஃபுமோ கிஷிடா, வறுமையை ஒழிப்பதில் சுகாதாரத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும், ஜப்பான் அரசாங்கம் 500 பில்லியன் யென்களை (கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கிய ஆசிய -பசிபிக் பிராந்தியத்தின் நீர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் ஒரு முயற்சியை அறிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிராந்தியத்திற்கு உதவியாக இருக்கும். அணைகளின் ஹைட்ரோலிக் கட்டுப்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் நீர் மின் ஆற்றலை அதிகரித்தல் போன்ற காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இந்த முயற்சியில் அடங்கும். குடிநீர் வசதிகளை விரிவுபடுத்துவதும் இதன் நோக்கமாகும்.

தொடக்க விழாவின் போது, பிராந்தியத்தில் நீர் தொடர்பான சவால்களை சமாளிக்க உறுதியளித்த குமாமோட்டோ பிரகடனத்தை பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்ட அதே வேளை, இது மார்ச் 2023 இல் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் நீர் மாநாட்டில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

உச்சிமாநாட்டில் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர,  2022 ஏப்ரல் 23ஆந் திகதி நிகழ்வின் திறப்பு விழா மற்றும் அரச தலைவர் அமர்வு ஆகியவற்றில் கலந்துகொண்டார்.

இலங்கைத் தூதரகம்,

டோக்கியோ

2022 ஏப்ரல் 26

Please follow and like us:

Close