2022 பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு

2022 பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு

ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கருடன் ஜூன் 23ஆந் திகதி இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா இலங்கைக்கு நல்கிய விரிவான ஆதரவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் அன்பான பாராட்டுக்களைத் தெரிவித்தார். மிகவும் சவாலான இந்தக் காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு இந்த உதவி இலங்கைக்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.

பல்வேறு துறைகளிலான எதிர்கால ஒத்துழைப்பு குறித்தும் இரு அமைச்சர்களும் இதன்போது கலந்துரையாடினர்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 ஜூன் 24

Please follow and like us:

Close