இலங்கைக்கான குழு, தெற்காசிய அவுஸ்திரேலியா கூட்டமைப்பு மற்றும் அவுஸ்திரேலியா இலங்கை வர்த்தக சபை ஆகியவற்றுடன் இணைந்து மெல்பேர்னில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2022 மார்ச் 08ஆந் திகதி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இலங்கை பட்டிக் புகைப்படப்பிடிப்பை ஏற்பாடு செய்தது. முதலாவதாக மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்வின் நோக்கம் புதிய நாகரீகப் போக்குகளில் ஆர்வமுள்ள இளைய அவுஸ்திரேலியர்களை சென்றடையும் நோக்கில், அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டாம் தலைமுறை இலங்கையர்கள் மற்றும் தெற்காசியர்களின் மூலம் அவுஸ்திரேலியர்களிடையே இலங்கை பட்டிக்களை விளம்பரப்படுத்துவதாகும்.
இந்த புகைப்படப்பிடிப்பில் செல்வி மற்றும் திருமதி தெற்காசியா அவுஸ்திரேலியா, மற்றும் செல்வி மற்றும் திருமதி இலங்கை அவுஸ்திரேலியா போட்டிகளின் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டிற்கான வெற்றியாளர்கள், இலங்கை பட்டிக் புடவைகளை அணிந்தனர். இளம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட அற்புதமான நவீன இலங்கை பட்டிக் ஆடைகள் கொண்ட புகைப்படப்பிடிப்பில் 'திருமதி தெற்காசியா அவுஸ்திரேலிய ரன்னர் அப் 2020' தாரா டயஸும் இடம்பெற்றார். அவுஸ்திரேலிய சந்தையில் இலங்கை பட்டிக்ஸை ஊக்குவிப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக துணைத் தூதுவர் கபில பொன்சேகாவை வடிவமைப்பாளர் பின்னர் சந்தித்தார்.
துணைத் தூதரகம், அமைப்பாளர்கள் மற்றும் ஊடகங்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட மொடல்களால் இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டன. அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை மற்றும் தெற்காசிய சமூக ஊடகங்கள் மூலமாகவும் அவை பரப்பப்பட்டன.
மெல்பேர்ன் ஒரு பன்முகக் கலாச்சார நகரமாக இருப்பதால், இலங்கையின் கலாச்சார அடையாளத்தையும் அதன் தனித்துவமான தயாரிப்புக்களான இலங்கை பட்டிக்களையும் காட்சிப்படுத்த சிறந்த இடங்களில் ஒன்றாகும். ஒரு பெரிய இலங்கை மற்றும் தெற்காசிய சமூகங்களின் தாயகமான மெல்பேர்ன், இலங்கை பட்டிக்களுக்கான ஒரு முக்கிய சந்தையாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.
மெல்பேர்னில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் டயானா பெரேரா, இலங்கைக்கான தலைவர் குழுவின் மிமி லியோனார்ட், போட்டியின் பணிப்பாளரும் அவுஸ்திரேலியா இலங்கை வர்த்தக சபையின் தலைவருமான டில்கி பெரேரா மற்றும் இலங்கைக்கான குழுவின் நிறைவேற்று உறுப்பினர் சவிந்தி பெரேரா சைனுதீன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
இலங்கையின் துணைத் தூதரகம்,
மெல்பேர்ன்
2022 மார்ச் 09