இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
மாண்புமிகு.திலக் மாரப்பன, ச.ச, பா.உ
அவர்களின் கூற்று
நிகழ்ச்சி நிரல் உருப்படி 2
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வு
ஜெனிவா, 2018 மார்ச் 21 ஆந் திகதி
தலைவர் அவர்களே,
பிரதி உயர் ஆணையாளர் அம்மையார் அவர்களே,
பேராளர்களே!
இலங்க அரசாங்கத்தின் சார்பில் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வில் கலந்து கொள்வதை மிகப்பெரிய கௌரவமாக நான் கருதுகின்றேன்.
இன்று என்னோடு அமைச்சரவை உறுப்பினர்களாகிய விசேட பணிகளுக்கான அமைச்சர் கௌரவ(கலாநிதி) சரத் அமுனுகம மற்றும் மாநகர சபைகள் மற்றும் உள்நாட்டு அரசிற்கான அமைச்சர் கௌரவ. ஃபைசர் முஸ்தபா ஆகியோர் இணைந்து கொண்டுள்ளனர். நானும், எனது சகாக்களும் அரச கூட்டணியை உருவாக்கிய இரண்டு பிரதான அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்கின்றோம். இந்த பேரவைக்கு முன்னதாகவும், 2015 ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் எமது குடிமக்கள் அனைவருக்குமான நல்லிணக்கம், சட்ட ஆட்சி, நல்லாட்சி, மனித உரிமைகள், நீதி, சமவுரிமை மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கான அரசின் திட உறுதிப்பாட்டினை ஒரே குரலாக உரையாடுவதற்காக நாம் இங்கு வருகை தந்துள்ளோம்.
தலைவர் அவர்களே,
இலங்கையுடன் தொடர்ச்சியான ஈடுபாட்டினை முன்னெடுத்து அனைத்து நேரங்களிலும் தமது ஆதரவையும், ஊக்குவிப்பையும் மற்றும் பெறுமதி வாய்ந்த தொழில்நுட்ப ஆதரவையும் எமக்களித்த உயர் ஆணையாளர், பிரதி உயர் ஆணையாளர் மற்றும் OHCHR இன் ஊழியர்கள் ஆகியோருக்கு எமது மனப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர் அவர்களே,
எமது நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாடுகளை நாம் சாதாரண விடயமாகக் கருதவில்லை. இலங்கை அரசியலமைப்பின் கீழ் உறுதியளிக்கப்பட்டுள்ளவாறு எவ்வித வேறுபாடுமின்றி அனைத்து நபர்களுக்கும் சட்டத்தின் சமனான பாதுகாப்பினை உறுதிசெய்வதும், சட்ட ஆட்சியை மேம்படுத்துவதற்காகவும் எம்மை ஆழமாக அர்ப்பணித்துள்ளோம். நீடித்த சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிறுவுவதன் ஊடாக மாத்திரமே சாத்தியமான சமனான சமூக-பொருளாதார அபிவிருத்தியை எமது குடிமக்களுக்கு வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் நாம் அடையாளப்படுத்தியுள்ளோம். அதற்காக நாம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதுடன், தலைவர் அவர்களே! நாம் சமூக-அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுத்த போதிலும், எமது குடிமக்கள் அனைவருக்குமான எமது நல்லிணக்க, சமாதான, நிலையான மற்றும் வளமான இலங்கை குறித்த பார்வையை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம். இந்த வகையில், இலங்கையில் மேற்கொள்ளப்படும் முன்னேற்றங்கள் தொடர்பிலான உயர் ஆணையாளரின் அவதானிப்புகளுக்கு மறுமொழியாக, 2017 பெப்ரவரி 28 ஆந் திகதி நடைபெற்ற பேரவையின் 34 ஆவது அமர்வில் நாம் இறுதியாக உரையாடியதிலிருந்தான மிக முக்கியமான சாதனைகளை பதிவு செய்ய நாம் விரும்புகிறோம். கடந்தாண்டிலும், அதற்கு முன்னரும் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் முரண்பாடுகள் மீள நிகழாமைக்கான உறுதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான இலங்கையின் திடமான உறுதிப்பாடு, விருப்பு மற்றும் ஆர்வம் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தலைவர் அவர்களே, காணாமல்போன பாதுகாப்புப் படை நபர்களின் குடும்பங்கள் உள்ளடங்கலாக, இன, மத மற்றும் பாலின வேறுபாடுகளின்றி பாதிக்கப்பட்ட அனைத்து சமூகத்தினருக்கும் நல்லிணக்கம், நீதி மற்றும் இழப்பீட்டு செயல்முறைகளை முன்னெடுப்பதில் நாம் கவனத்துடன் செயற்பட்டு வருகிறோம்.
சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒருசில வாரங்களில் 2015 பெப்ரவரி மாதம் இலங்கையின் சுதந்திர தினத்தன்று இலங்கை அரசாங்கமானது ‘பயங்கரவாதம் மற்றும் வன்முறை முடிவடைந்துள்ளது. காயங்களைஆற்றுப்படுத்துவதற்கு தேவையான நேரம் தேவைப்படுவதுடன், அனைவருக்கும்நிலையான அமைதி மற்றும் பாதுகாப்பை கட்டியெழுப்பல் ஆகியவை நம் மீதுவிதிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் மற்றும் குடியுரிமையின் பலன்களை அனைவரும்சமனாக அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாகஎமக்கு இதுவமைந்துள்ளது‘ என்ற முறையான சமாதான பிரகடனத்தைமுன்னெடுத்திருந்தது. திரு.தலைவர் அவர்களே, எமது அனைத்து குடிமக்களும் ஒன்றாகவும், இன மற்றும் மத வேறுபாடுகளின்றி, ஒன்றாக சேவையாற்றுவதுடன், பாரதூரமான முரண்பாடுகளை சமாளித்தல் மற்றும் நீடித்த அமைதி மற்றும் வளத்தை நோக்கி எமது நாட்டினை வழிநடத்திச் செல்லல் ஆகியவையே தொடர்ந்து எமது நோக்கமாக இருக்கவுள்ளது.
தலைவர் அவர்களே,
நீங்கள் அறிந்தவாறு, முரண்பாடு நிலவிய காலத்தில் இலங்கை பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கப்பட்ட செயல், பல நாடுகளிலும் தீவிரவாத குழுவாக அடையாளப்படுத்தப்பட்ட குழுவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதேயொழிய, எமது நாட்டிலுள்ள எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக முன்னெடுக்கப்பட்டதல்ல. இந்த பயங்கரவாத குழுவின் நடவடிக்கைகள், அண்மைய வரலாற்றில் முதல் முறையாக அப்பாவி மக்களை குறிவைத்து இடம்பெறும் தாக்குதல்கள் உலகம் முழுவதும் பயங்கரவாத குழுக்களினால் பின்பற்றப்பட்டு வருகிறது. இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தினரும் எனது நாட்டினுள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்று திரண்டுள்ளதுடன், தற்போது பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர்.
தலைவர் அவர்களே,
2015 ஜனவரி மாதம் தொடங்கி இன்று வரை மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றின் மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்புக்கான முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் முன்னேற்றங்களை உள்ளடக்கிய விரிவான பட்டியலொன்று இந்தப் பேரவையின் அனைத்து உறுப்பினர்களிடமும் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நாம் முன்னெடுத்துள்ள ஒருசில மிக முக்கியமான படிமுறைகள் குறித்து நான் விபரிக்கவுள்ளேன்.
2016 ஓகஸ்ட் மாதம் காணாமல்போனோருக்கான அலுவலகத்திற்காக இயற்றிய சட்டத்துடன், 2017 ஜுலை மாதம் திருத்தப்பட்டு, 2017 செப்டெம்பர் மாதம் காணாம்போனோருக்கான நிரந்தர அலுவலகம் சனாதிபதி அவர்களினால் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு பேரவையினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், சனாதிபதி அவர்கள் 2018 பெப்ரவரி 28 ஆந் திகதி அவ் அலுவலகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தார். பெப்ரவரி 28 ஆந் திகதி அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பில் அலுவலகத்தின் செயல்படு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கான அரசின் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என சனாதிபதி அவர்கள் உறுதியளித்திருந்தார். இந்த அலுவலகத்திற்காக 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவு செலவு திட்டத்தில்4 பில்லியன் இலங்கை ரூபாய்கள் (சுமார் 9 மில்லியன் அமெரிக்க டொலர்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் பன்முக சமூகத்தைச் சேர்ந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்ட ஏற்பாடுகளுக்கிணங்க உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தமது ஆணைகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு உதவிடும் வகையிலமைந்த பொறிமுறைகளின் பயிற்சி மற்றும் கற்கைகளை தற்போது பெற்று வருகின்றனர்.
முரண்பாடு நிலவிய காலப்பகுதியில் பாதுகாப்பு படையினரின் வசமிருந்த 70% வீதத்திற்கும் மேற்பட்ட தனியார் காணிகள் தற்போது அதன் உண்மையான மற்றும் உரிமை கொண்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 2018 ஜனவரி மாதம் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலாளரின் தலைமையிலமைந்த குழுவானது காணி விடுவிப்பு நடவடிக்கைகள், நஷ்டஈட்டு கொடுப்பனவு மற்றும் தொடர்புடைய விடயங்களை அடையாளப்படுத்தல் மற்றும் கண்காணிப்பதற்காக தொடர்புடைய அனைத்து உள்நாட்டு பங்குதாரர்களுடனான சந்திப்புக்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.
2017 பெப்ரவரி மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட தகவல் அறியும்உரிமைச்சட்டத்தின் மூலம் ஏற்கனவே பொதுமக்கள் நலன்களைப் பெற்று வருகின்றனர். தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு தற்போது பயனுறு வகையில் செயல்பட்டு வருவதுடன், முறையீடுகள் பலவற்றுக்கு தீர்வளித்துள்ளது.
சித்திரவதைக்கு எதிரான பூச்சிய சகிப்புத்தன்மைக்கான அதன் திட உறுதிப்பாட்டினை குறிக்கும் வகையில், 2017 டிசம்பர் மாதம் சித்திரவதைக்கு எதிரான சாசனத்திற்கான விருப்ப நெறிமுறை மற்றும் தேசிய தடுப்பு பொறிமுறையாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினை உருவாக்கியமை ஆகியவற்றை இலங்கை ஏற்றுக்கொண்டது.
இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் ஸ்தாபிப்புக்காக சட்ட வரைஞரினால் முன்னெடுக்கப்பட்ட சட்ட உருவாக்கத்திற்கு அமைச்சரவை அமைச்சர்கள் 2018 மார்ச் 6 ஆந் திகதி அனுமதி வழங்கியது. வரைவுச் சட்டம் உள்நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இறுதியாக்கப்பட்டவுடன், வரைவு சட்ட மூலமானது பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வலுக்கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்படுவதிலிருந்து அனைத்துநபர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கான சர்வதேச சாசனம் மீதான சட்ட நடைமுறை மார்ச் 7 ஆந் திகதி பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்டது.
விசேட நடைமுறைகளின் செயற்பாட்டு ஈடுபாட்டின் தொடர்ச்சியாக, 2017 ஜூன் மாதத்தில், ‘மனித உரிமைகளை மேம்படுத்தி, பாதுகாப்பதோடு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளுதல்’ மீதான விஷேட அறிக்கையாளர் இலங்கைக்கு வருகை தந்தார். 2017 அக்டோபர் மாதத்தில், உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதனை மேம்படுத்துவதன் மீதான விஷேட அறிக்கையாளர் வருகை தந்ததுடன், 2017 அக்டோபர் மாதத்தில், வலுக்கட்டாயமாக தடுத்து வைத்தல் மீதான செயற்பாட்டுக் குழு நாட்டிற்கு வருகை தந்தது.
நல்லிணக்கம் மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றின் மீதான எமது முழுமையான ஈடுபாட்டினை நிரூபிப்பதற்காக ஒட்டாவா மற்றும் ஒஸ்லோசாசனங்களுக்கு (ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் பாவனை மற்றும் கையிருப்பு, உற்பத்தி மற்றும் கைமாற்றல் மீதான தடை மற்றும் அவற்றின் அகற்றல் தொடர்பான சாசனம்) முறையே 2017 டிசம்பர் மாதம் 13 மற்றும் 2018 மார்ச் 01ஆந் திகதிகளில் இணைந்து கொண்டதுடன், இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஒட்டாவா சாசனத்தின் விஷேட தூதுவர் வருகை தந்தார்.
2017 பெப்ரவரி மாதத்தில் பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தினை ஒழிப்பதற்கான குழுவினாலும் (CEDAW), 2017 ஜூன் மாதத்தில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான குழுவினாலும் (CESCR) மற்றும் 2018 ஜனவரி மாதத்தில் சிறுவர் உரிமைகளுக்கான குழுவினாலும் (CRC) மேற்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பான காலாந்தர அறிக்கைகளில் இலங்கை பங்குபற்றியது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலாக மனித உரிமைகளுக்கான பாதுகாப்புக்கள் மற்றும் ஏனைய சர்வதேச தரங்களுக்கு இயைபான பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தினை பிரதியீடு செய்வதற்கு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அடிப்படை மட்ட அமைப்புக்களான உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான பெண்பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான ஒதுக்கீட்டை உறுதிசெய்வதற்காக, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் சட்டம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டம் ஆகியவற்றுக்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், கணிசமான பெண்கள் தொகையை உள்ளூராட்சி மன்றங்களில் உறுதிப்படுத்துவதற்காக, பெண்களுக்கான 25% பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் சட்டம் முதன் முறையாக தாபிக்கப்பட்டது.
2017 – 2021ஆம் ஆண்டுக்கான தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டத்தின்முறையான செயற்படுத்துகைக்காக, சம்பந்தப்பட்ட வரிசையமைச்சுக்கள் மற்றும் முகவர் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை கண்காணிக்கும் பொருட்டாகவும், தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதன் நிமித்தமும் 2017 டிசம்பர் மாதத்தில் மூன்று அடுக்கு பொறிமுறையொன்று தாபிக்கப்பட்டது.
2017 நவம்பர் மாதத்தில் 3ஆம் சுற்று அனைத்துலக காலாந்தர மீளாய்வில்இலங்கை பங்குபற்றியதுடன், மார்ச் மாதம் 19ஆந் திகதி அதன் அறிக்கை சுவீகாரம் செய்யப்பட்டது.
ஆலோசனைப் பணிக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேவையான பரிந்துரைகளை கவனத்திற்கொள்வதான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று தொடர்பான வரைவுச்சட்டம் தற்பொழுது மேம்படுத்தப்பட்ட ஆலோசனைக் கட்டத்தில் உள்ளதுடன், அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக கூடிய விரைவில் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்னும் சவாலாகவுள்ள இந்த முக்கியமான பயணத்தில் நாங்கள் தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டிருப்பதால், சட்டம் மற்றும் நிர்வாக வழிமுறைகளின் வாயிலான இந்த முக்கியமான மாற்றீட்டு படித்தரங்கள் நன்றாக உறுதிப்படுத்தப்படுவதனையும், முறையாக நிறுவனமயமாக்கப்படுவதனையும் உறுதிப்படுத்துவதற்காக, எமது சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளினதும் பங்குபற்றுதலின் தேவைப்பாட்டினை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கின்றோம்.
பிணக்குகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான எமது உறுதியான நிலைப்பாட்டின் வாயிலாக, நல்லிணக்க நிகழ்ச்சி நிரலினை நிறைவேற்றுவதற்கு நாங்கள் அரப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இந்த நிகழ்ச்சி நிரலானது முன்னொருபோதும் காணப்படாததொன்றாகும். நாங்கள் பரந்த நிகழ்ச்சிநிரலொன்றினை மிகவும் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பேற்றுள்ளோம். அனேகமான நாடுகளில் குறித்த அளவீடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பல தசாப்தங்கள் சென்றுள்ளன. சவால்களுக்கு புறம்பாக, இது அரசின் கடமையாகும் என நாங்கள் முழுமையாக அங்கீகரித்துத்தால், நிலையானதும், சமாதானம் மிக்கதும், ஒப்புரவானதும், வளமானதுமான சமுதாயத்திற்கான அடித்தளத்தினை அனைத்து தரப்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அனைத்து சமுதாயங்களுக்கும் மற்றும் அனைத்து எதிர்கால சந்ததியினருக்கும் நாங்கள் இட்டுச்சென்றுள்ளோம் என்பதனை உறுதிப்படுத்துவதன் பொருட்டு எமது ஈடுபாடுகள் தொடர்ந்தும் நிலையாகவுள்ளன. எமது கடந்த காலத்தின் கடினமான மரபுகளுடன் தொடர்பான சுமைகளை எமது எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்லக் கூடாது என்பதனை நாங்கள் அங்கீகரித்துள்ளோம்.
தலைவர் அவர்களே!
இலஙகையின் பல்வகைமைச் சமுதாயத்தில் முக்கிய பங்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் சமுதாயத்தின் உறுப்பினர்களை இலக்கு வைத்து இலங்கையின் சில பாகங்களில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஒரு தேசமென்ற வகையில் நாங்கள் வருத்தமடைகின்றோம். குறித்த செயற்பாடுகள் அனைவருக்குமான சமமான உரிமைகளும், சட்டத்தின் ஆட்சியும் உறுதிப்படுத்தப்பட்டு, ஜனநாயகமானதும், பன்முகத்தன்மை வாய்ந்தததுமான நாட்டில் நிலவமுடியாத இலங்கையின் பகிரப்பட்ட நோக்குகளுக்கு எதிரானதாகும். இந்த செயற்பாடுகளை தாபித்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், இடம்பெற்றிருக்க இயலுமான ஏதேனும் குறைபாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக கடுமையான அளவீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான செயற்பாடொன்று ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவை அமர்வுகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கையில் எமது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே சில தரப்பினர்கள் இந்த செயற்பாடுகளின் பின்னணியில் உள்ளனர் என நாங்கள் நம்புகின்றோம்.
விசாரணைகளைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களும், தகவல் பரிமாற்ற தளங்களும் வெறுப்புக்களையும், தவறான தகவல்களையும் பரப்புவதற்காக மாத்திரமல்லாது, தாக்குதல்களை ஒழுங்கு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதால், சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தற்காலிக தடை விதிப்பதற்கு அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டது. இந்த அனைத்து தடைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இந்த அனுபவத்தின் விளைவாக, வெறுப்புப் பேச்சுக்களை தவிர்ப்பதற்காக சமூக ஊடக இயக்குனர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கம் முறையான ஈடுபாடுகளை மேற்கொண்டுள்ளது. சமுதாயங்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் 2018 மார்ச் 06ஆந் திகதி நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை 2018 மார்ச் 17ஆந் திகதி நீக்கப்பட்டது.
தலைவர் அவர்களே!
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சிநிரலானது அரசாங்கம் தனியாக செயற்படுவதனால் மாத்திரம் வெற்றிகரமாக அடைந்துகொள்ளப்பட முடியாது. இந்த முக்கியமான தேசிய முயற்சியில் அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர், கல்விமாண்கள், வியாபார சமூகத்தினர், ஊடகம் மற்றும் சர்வதேச சமூகத்தின் பங்குபற்றுதலானது மிவும் அவசியமானதாகும்.
தலைவர் அவர்களே!
எமது அனைத்து பிரஜைகளுக்கும் சமாதானமானதும், நிலையானதும், நலலிணக்கமுடையதும், வளமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு வழிவகுக்கும் எமது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதனை நாங்கள் உண்மையாகவும், உறுதியாகவும் குறிப்பிட விரும்புகின்றோம்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் மேம்படுத்தப்பட்ட நீதியை வழங்குவதற்கு இலங்கையில் காணப்படும் நீதி மற்றும் சட்ட அமுலாக்க பொறிமுறைகள் முழுமையாக இயலுமானதாகவும், ஈடுபாடானதாகவும் உள்ளன. இவற்றுக்கு நீண்டகால நேர்மையும், தொழில்வாண்மையும் காணப்படுவதுடன், அவற்றின் சுதந்திரத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 2015 ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தலைவர் அவர்களே! அனைத்து நல்லிணக்க பொறிமுறைகளும் எமது அரசியலமைப்பிற்கு இயைபாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்பதனை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
தலைவர் அவர்களே!
இலங்கையின் பிணக்குகளின் மரபுகள் பாரமானதாவதுடன், அவை எமது சமூகத்தினை இன்றைய நிலைமைக்கு தள்ளியுள்ளது. அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக தீவிரப்போக்குடையவர்கள் இந்த சந்தர்ப்பத்தின் வாயிலாக நன்மைகளை பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். இந்த உண்மையை உணர்ந்துகொண்டுள்ளமையானது, நாங்கள் கடந்த வன்முறைக்காலத்திற்கு மீள ஒருபோதும் செல்லாதிருப்பதனை உறுதிப்படுத்துவதற்கான தீர்மானங்களை கொண்டிருப்பதற்காக மாத்திரம் எங்களுக்கு வழியமைக்கின்றது. எமது மக்கள் அனைவருக்கும் எமது ஈடுபாடுகளின் முழுமையாக்கத்தை உறுதிப்படுத்தி, எமது அண்மைய வரலாற்றின் துன்பியல் மற்றும் இடையூறுகள் நிறைந்த காலத்திற்கு முற்றுப்புள்ளியிடுவதே எமது நோக்கமாகும்.
நன்றி