2018 ஏப்ரல் 27ஆந் திகதிய கொரியாவிற்கிடையிலான உச்சிமாநாட்டின் மீதான அறிக்கை

2018 ஏப்ரல் 27ஆந் திகதிய கொரியாவிற்கிடையிலான உச்சிமாநாட்டின் மீதான அறிக்கை

கொரியக் குடியரசு மற்றும் ஜனநாயக மக்கள் கொரியக் குடியரசு ஆகியவற்றின் தலைவர்களுக்கு இடையில் 2018 ஏப்ரல் 27ஆந் திகதி இடம்பெற்ற கொரியாவிற்கிடையிலான உச்சிமாநாட்டினையும், சமாதானம், சௌபாக்கியம் மற்றும் கொரியக் குடாநாட்டை இணைப்பதற்கான பன்முன்சொம் பிரகடனத்திற்கு இணைந்தமையையும் இலங்கை வரவேற்கின்றது.

நிலையான சமாதானம் மற்றும் சௌபாக்கியத்தினை அடைந்து கொள்வதன் வாயிலாக கலந்துரையாடல், இராஜதந்திரம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான செயலாக்கத்தினையும், கொரியக் குடாநாட்டில் அணுவாயுத சக்தியினை இல்லாதொழிப்பதனையும் இலக்காகக் கொண்டு பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான ஈடுபாடுகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை  நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

பன்முன்சொம் உச்சிமாநாட்டின் அடைவுகள் 2018 ஜூன் 12ஆந் திகதி சிங்கப்பூரில் நடைபெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஜனநாயக மக்கள் கொரியக் குடியரசு ஆகியவற்றின் தலைவர்களுக்கு இடையிலான உச்சிமாநாட்டில் வலுப்படுத்தி, மேம்படுத்தப்படுவதனை நாங்கள் மேலும் எதிர்பார்க்கின்றோம்.

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு
 
2018 மே மாதம் 11ஆந் திகதி 

 


tampdf

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close