20வது விசேட கொன்சியூலர் முகாம் தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தால் முன்னெடுப்பு

20வது விசேட கொன்சியூலர் முகாம் தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தால் முன்னெடுப்பு

தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 20வது விசேட  கொன்சியூலர் முகாமை 2022 டிசம்பர் 14ஆந் திகதி சான்சரி வளாகத்தில் நடாத்தியது.

இந்நிகழ்வில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா கலந்து கொண்டு 300  பயனாளிகளுக்கு கொன்சியூலர் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் உள்ள 18 புனர்வாழ்வு முகாம்களில் வதியும் வெளிநாட்டில் உள்ள  இலங்கையர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,

சென்னை

2022 டிசம்பர் 20

Please follow and like us:

Close