​ஹோப் வேர்ல்ட்வைட் இலங்கைக்கு தாராளமான நன்கொடை வழங்குகின்றது

 ​ஹோப் வேர்ல்ட்வைட் இலங்கைக்கு தாராளமான நன்கொடை வழங்குகின்றது

 வொஷிங்டன், டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஹோப் வேர்ல்ட்வைட்  ஆகியவற்றின் கூட்டு ஊடக வெளியீடு

வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் மாண்புமிகு தூதுவர் மகிந்த சமரசிங்கவின் பணிப்புரையின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, அமெரிக்காவில் உள்ள முன்னணி சர்வதேச மனிதாபிமான அமைப்பான ஹோப் வேர்ல்ட்வைட் 2,740,498.32 அமெரிக்க  டொலர் பெறுமதியிலான (இலங்கை ரூபா 1,017,958,100.964) அவசர மருத்துவப் பொருட்களை தாராளமான நன்கொடையாக இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள ஏழைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் துன்பப்படுபவர்களுக்கு சேவை செய்வதற்கு பிரதிபலிக்கும் வகையில், ஹோப் வேர்ல்ட்வைட் 1991 இல் நிறுவப்பட்டது. தேவைகளையுடைய நாடுகளுடன் கூட்டாண்மையை ஏற்படுத்தி, தன்னார்வலர்களை வழங்குவதுடன்,  பேரழிவுகளின் போது பிரதிபலித்து, சமூகங்களை பலப்படுத்துகிறது. தன்னார்வலர்கள், தேவாலயங்கள் மற்றும் நிறுவனப் பங்குதாரர்களுடன் கூடிய உலகளாவிய வலையமைப்புடன், ஹோப் வேர்ல்ட்வைட் பேரிடர் ஏற்படும் போது தேவையான நிவாரணங்களைத் திரட்டி, அதனை தேவையுடையோருக்கு வழங்குகின்றது.

ஃப்ளூக்ஸெடின் மற்றும் டெஸ்வென்லாஃபொக்சின் சக்சினேட் ஈஆர் போன்ற செரோடோனின் ரீஅப்டேக் இன்ஹிபிட்டர்கள், ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் சல்பேட் போன்ற மலேரியா எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கார்டியோ எக்ஸ்டி மற்றும் டைமோலோல் போன்ற உயர் இரத்த அழுத்த மருந்துகளை உள்ளடக்கிய மருந்துப் பொருட்களுடன் இலங்கை மக்களுக்கு ஹோப் வேர்ல்ட்வைட்  வழங்கும் முதலாவது பொதி இதுவாகும்.

'வலுவான கூட்டாண்மை மற்றும் எமது நன்கொடையாளர்களின் தாராள மனப்பான்மையின் மூலம் மட்டுமே இந்த நெருக்கடியான காலங்களில் நாங்கள் பிரதிபலித்து, சோகத்தால் பாதிக்கப்பட்ட  சமூகங்களை ஆதரித்து உதவ முடியும்' என ஹோப் வேர்ல்ட்வைட்டின் தலைவரும், தலைமை நிறைவேற்று அதிகாரியுமான டேவ் மாலுடினோக் குறிப்பிட்டார்.

சர்வதேச உதவி மற்றும் மருந்து பொருட்கள் இலங்கைக்கு இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றதொரு நேரத்தில், இலங்கை சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசத்திற்கு உதவுவதற்கான தாராள முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்களுக்காக ஹோப் வேர்ல்ட்வைட்டிற்கு இலங்கை மக்கள் இலங்கைத் தூதரகத்துடன்  இணைந்து தமது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிக்கின்றனர்.

இலங்கைத் தூதரகம்,                                                                                    ஹோப் வேர்ல்ட்வைட்

வொஷிங்டன் டிசி.                                                                                          அட்லாண்டா, ஜிஏ

 2022 செப்டம்பர் 27

Please follow and like us:

Close