ஸ்டொக்ஹோமில் உள்ள பள்ளிவாயலுக்கு வெளியே குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு இலங்கை கண்டனம்

ஸ்டொக்ஹோமில் உள்ள பள்ளிவாயலுக்கு வெளியே குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு இலங்கை கண்டனம்

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படும் ஈத் அல் அல்ஹாவின் போது சுவீடனில் உள்ள பள்ளிவாயலுக்கு வெளியே இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆன் எரிக்கப்பட்டதை இலங்கை கண்டிக்கின்றது.

மற்றவர்களின் உரிமைகளை மதிக்கும் வகையில் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பயன்படுத்துவதற்கும், மதத்தின் அடிப்படையில் பிளவுகளையும் வெறுப்புக்களையும் உருவாக்குவதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் இருப்பதை உறுதி செய்வதற்குமான பொறுப்பை  கருத்துச் சுதந்திரம் தன்னகத்தே கொண்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் நலனுக்காக, சமூகங்களுக்கு இடையே துருவமுனைப்புக்கு  வழிவகுக்கக்கூடிய மத சகிப்புத்தன்மையின்மை மற்றும் வெறுப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அனைத்து நாடுகளும், தனிநபர்களும் கடமைப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2023 ஜூன் 30

Please follow and like us:

Close