ஷாங்காய் நகரில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் ஷாங்காய் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளருடன் சந்திப்பு

ஷாங்காய் நகரில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் ஷாங்காய் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளருடன் சந்திப்பு

துணைத் தூதுவர் அனுர பெர்னாண்டோ 2022 பெப்ரவரி 23ஆந் திகதி சீனாவின் ஷாங்காய் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஃபூ ஜிஹோங்கை மரியாதை நிமித்தம் சந்தித்தார். 2022ஆம் ஆண்டு சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 65வது ஆண்டு நிறைவையும் ரப்பர் அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 70வது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது. சகோதர நகரங்களாக, ஷாங்காய் மற்றும் கொழும்பு பல துறைகளில் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன.

இரு தரப்பினரும் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடினர். தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கும் சீனாவின் பொருளாதார அபிவிருத்திக்கும் ஷாங்காய் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து துணைத் தூதுவர் குறிப்பிட்டார். சீனா துறைமுக நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான கொழும்பு துறைமுக நகர கூட்டுத் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையில் அதிக வாய்ப்புக்களை உருவாக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவுக்கான தனது உண்மையான விருப்பத்தை பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

 

இலங்கையின் துணைத் தூதரகம்,

ஷாங்காய்

2022 மார்ச் 10

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close