வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியின் எகிப்துக்கான விஜயம்

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியின் எகிப்துக்கான விஜயம்

எகிப்திய வெளியுறவு அமைச்சர் பதர் அப்துலெட்டியின் அழைப்பின் பேரில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, 2024 ஆகஸ்ட் 07 முதல் 09 வரையில் எகிப்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இப்பயணத்தின் போது, கெய்ரோவில் உள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், எகிப்தின் முதலீடு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சரையும் சந்திக்கவுள்ளார். அமைச்சர் சப்ரி இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் எகிப்திய வர்த்தக சம்மேளன கூட்டமைப்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன்  பல முக்கியஸ்தர்களையும் சந்திக்கவுள்ளார்.
இந்த இருதரப்பு விஜயமானது இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
 2024 ஆகஸ்ட் 07
Please follow and like us:

Close