வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன சவுதி அரேபிய இராச்சியத்திற்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன சவுதி அரேபிய இராச்சியத்திற்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன 2022 மார்ச் 19 முதல் 24 வரை சவுதி அரேபிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இராஜாங்க அமைச்சர் ஜயரத்ன தனது விஜயத்தின் போது சவுதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் தொழிலாளர்களுக்கான மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அப்துல்லா பின் நாசர் அபுத்னைனுடன் இருதரப்பு கலந்துரையாடலை மேற்கொண்டார். இராச்சியத்திற்கு திறன் தொழிலாளர் வகைகளை அதிகரித்தல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே உள்ள தொழிலாளர் தொடர்பான நிறுவனங்களுக்கிடையில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

முதலீட்டு அமைச்சர் காலிட் அல் ஃபாலிஹ் மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அடெல் பின் அஹமட் அல் ஜுபைர் ஆகியோரை சந்தித்த போது, இராஜாங்க அமைச்சர் ஜயரத்னவுடன் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இணைந்து கொண்டார்.

ரியாத் வர்த்தக சம்மேளனத்தின் மனித வளங்கள் மற்றும் தொழிலாளர் சந்தைக் குழுவின் உறுப்பினர்களுடனான சந்திப்பில், மனிதவள மற்றும் தொழிலாளர் சந்தைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் மன்சூர் ஏ. அல்ஷாத்ரி தலைமையிலான வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தைப் பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சரும் கலந்துகொண்டார்.

இந்த விஜயத்தின் போது, இராஜாங்க அமைச்சர் ஜயரத்ன ரியாத்தில் உள்ள பெண்கள் நலன்புரி நிலையத்திற்கும் விஜயம் செய்ததுடன், இராச்சியத்தில் உள்ள ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கான ஒருங்கிணைப்பு சபை, அல் அஜீர் ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கலாநிதி. பைசல் பின் எம். வாலன் ஆகியோரை சந்தித்த அதே வேளை, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் பராமரிக்கப்பட்டு வரும் இலங்கை வீட்டுப் பணியாளர்களுக்கான பாதுகாப்பான இல்லத்தைப் பார்வையிட்டார்.

சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் பி.எம். அம்சா, வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தைப் பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் பிரதீப் சபுதந்திரி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் தூதரக அதிகாரிகள் இராஜாங்க அமைச்சருடன் இந்த ஈடுபாடுகளின் போது கலந்துகொண்டனர்.

இலங்கைத் தூதரகம்,

ரியாத்

2022 மார்ச் 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close