வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தென்னாபிரிக்கத் தூதுவருடன் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தென்னாபிரிக்கத் தூதுவருடன் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தென்னாபிரிக்காவின் தூதுவர் சாண்டில் எட்வின்  ஷால்க்கை 2021 மார்ச் 25ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அனுபவம் குறித்து இந்த சந்திப்பின் போது  முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது. இந்த அனுபவங்கள் இலங்கையின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆக்கபூர்வமாக மாற்றியமைக்கப்படுவதை உறுதி செய்வதில் அக்கறை செலுத்தும் அதே வேளையில் ஏனைய நாடுகளின் நேர்மறையான அனுபவங்களை உன்னிப்பாக ஆராய்வதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உயர்ஸ்தானிகரிடம் விளக்கினார்.

தென்னாபிரிக்காவின் அனைத்து செயற்பாடுகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னரான அவரது பல்வேறு முன்முயற்சிகள் தொடர்பிலும் வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சருக்கு உயர்ஸ்தானிகர் விரிவாக விளக்கினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 மார்ச் 26

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close