வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் தீபாவளிக் கொண்டாட்டம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் தீபாவளிக் கொண்டாட்டம்

இராஜதந்திரிகள் மற்றும் அமைச்சின் ஊழியர்களின் பங்கேற்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தீபாவளியைக் கொண்டாடியது. இந்நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, இந்த நிகழ்வானது, எமது நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்கள் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்து, பரஸ்பரம் பண்டிகைகளில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதை எடுத்துக்காட்டுவதாகத் தெரிவித்தார். அரசியலமைப்பின் மூலம் அனைத்து சமூகங்களுக்கும் சம  உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார்.

வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன தனது வரவேற்பு உரையில் அமைச்சின் ஊழியர்களின் பன்முகத்தன்மை, திறமை மற்றும் தீபாவளிக்  கொண்டாட்டங்களை கூட்டாக ஒழுங்கமைப்பதில் அவர்களது குழுப்பணி ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் நேபாளத் தூதுவர் பாஷு தேவ் மிஸ்ரா ஆகியோர் தீபாவளியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.

தீபாவளிக் கொண்டாட்டங்களில் சுவாமி குணாதிதானந்த சரஸ்வதியின் சமய அனுஷ்டானங்களும், அதனைத் தொடர்ந்து கொழும்பில் உள்ள அமைச்சு  மற்றும்  இந்திய கலாச்சார மையத்தின் ஊழியர்களும் ஆசீர்வாதங்களைத் தூண்டும் பாரம்பரிய நடனங்களும் இடம்பெற்றன.

நிகழ்வை ஏற்பாடு செய்த அமைச்சின் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் மனிஷா பெரேரா நன்றியுரை ஆற்றினார்.

தீபாவளிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு அனைத்து சமூகத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களின் பங்கேற்புடன் 'கோலப் போட்டி'  நடாத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, தீபாவளியின் பாரம்பரிய உணவுகளுடன் வரவேற்பு உபசாரம் அளிக்கப்பட்டது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 நவம்பர் 21

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close