வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கு விஜயம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கு விஜயம்

ஈரானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி 2023 ஆகஸ்ட் 04 - 07 வரை ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யத் இப்ராஹிம் ரைசியை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ள அமைச்சர் அலி சப்ரி, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஈரான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுடன் சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார். ஈரானின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தில் அமைச்சர் உரை நிகழ்த்தவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 ஆகஸ்ட் 03

Please follow and like us:

Close