புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரான விஜித ஹேரத் இன்று (2024,செப்டெம்பர் 25) எளியதொரு வைபவத்தின் மூலம் அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். வெளிநாட்டு அலுவல்களுக்கான செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினரொருவராக, அமைச்சர் ஹேரத் 2000 ஆம் ஆண்டு முதல் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். அவர் இதற்கு முன்னர் கலாச்சார அலுவல்கள் மற்றும் தேசிய பாரம்பரிய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
அமைச்சர் ஹேரத் களனிப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டம் பெற்றுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 செப்டம்பர் 25
Please follow and like us: