வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருடன் கொழும்பில் சந்திப்பு

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருடன் கொழும்பில் சந்திப்பு

பிரதமர் இம்ரான் கான் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமையைத் தொடர்ந்து இருதரப்பு உறவை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மத் சாத் கட்டாக்கை குடியரசுக் கட்டிடத்தில் வைத்து சந்தித்தார்.

பாகிஸ்தான் நன்கொடையாக வழங்கிய நடமாடும் நூலகங்களை அமைத்தல் மற்றும் இலங்கை மாணவர்களுக்கு மேலதிகமான நூறு மருத்துவ புலமைப்பரிசில்களை வழங்குதல் உள்ளிட்ட பிரதமர் இம்ரான் கானின் விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இலங்கையர்களுக்காக பௌத்த யாத்ரீக இடங்களைத் திறப்பதற்கான பாகிஸ்தானின் சலுகையை வரவேற்ற அமைச்சர் குணவர்தன, பாகிஸ்தான் இலங்கைத் துறை பிரயாண சலுகைகளை இலங்கை சுற்றுலாவுடன் சேர்ந்து விமானத் துறை விரைவில் அறிவிக்கும் எனத் தெரிவித்தார். நன்கு பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பௌத்த தலங்களின் பன்முகத்தன்மையைக் காண்பதற்காக பாகிஸ்தானுக்கு பரிச்சயமான விஜயங்களை மேற்கொள்ளுமாறு பௌத்த பிக்குகள், ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வியியலாளர்களுக்கு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அழைப்பு விடுத்தார்.

மார்ச் 23ந் திகதி கொழும்பில் நடைபெறும் பாகிஸ்தான் தேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் குணவர்தனவுக்கு உயர் ஸ்தானிகர் கட்டாக் அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

 2021 மார்ச் 17

 

Please follow and like us:

Close