வெசாக் போயா நிகழ்வுகளுக்காக வெளிநாட்டு அமைச்சினால் பல விஷேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு

வெசாக் போயா நிகழ்வுகளுக்காக வெளிநாட்டு அமைச்சினால் பல விஷேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இந்த ஆண்டு வெசாக் தினத்தைக் கொண்டாடும் முகமாக பல மத நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், வெளிநாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட தம்ம சொற்பொழிவுப் பிரசங்கம் மே 21 ஆந் திகதி அதி வணக்கத்திற்குரிய ஞானசீஹ நாயக்க தேரர் அவர்களின் ஆதரவின் கீழ் பம்பலப்பிட்டி சிரி வஜிராம விகாரையில் நடைபெற்றது.

பிரசங்கத்தின் போது, தற்போதைய கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அமைச்சின் சுத்திகரிப்பு ஊழியர்களின் குடும்பங்களுக்கு வெளிநாட்டு சேவை சங்கம் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் நலன்புரி சங்கம் ஆகியவற்றின் தலைமையில் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, வெளிநாட்டு சேவை சங்கத்தின் தலைவர் விஸ்வநாத் அப்போன்சோ, சங்கத்தின் ஏனைய அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 மே 23

...............................................

Video link:  https://www.youtube.com/watch?v=B9oc-QG5rw4

Please follow and like us:

Close