விவசாய அமைப்புக்களின் விவசாய சுற்றுச்சூழல் மாற்றத்தில் இலங்கை மற்றும் பிரான்ஸ் ஒத்துழைப்பு

விவசாய அமைப்புக்களின் விவசாய சுற்றுச்சூழல் மாற்றத்தில் இலங்கை மற்றும் பிரான்ஸ் ஒத்துழைப்பு

தென்னை, கித்துல் மற்றும் பனை சாகுபடி ஊக்குவிப்பு, சம்பந்தப்பட்ட தொழில்துறைத் தயாரிப்பு உற்பத்தி மற்றும்  ஏற்றுமதிப் பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் திரு. அருந்திக பெர்னாண்டோ, 2021 செப்டம்பர் 04 - 10 வரையான காலப்பகுதியில் பிரான்சுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்த பல நிகழ்ச்சிகளில் இராஜாங்க அமைச்சர் பங்கேற்றார்.

இந்த விஜயத்தின் போது, அபிவிருததிக்கான விவசாய ஆராய்ச்சி சர்வதேச ஒத்துழைப்பு மையமான சி.ஐ.ஆர்.ஏ.டி.  யின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி. எலிசபெத் கிளேவரியை 2021.09.08ஆந் திகதி இராஜாங்க அமைச்சர் சந்தித்தார்.

தென்னை, கித்துல், ரப்பர் மற்றும் இதர வெப்பமண்டலப் பயிர்களின் சம்பந்தப்பட்ட பொருட்களின் பெறுமதிச்  சங்கிலிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் அதன் விவசாயமயமாற்றல் மற்றும் இலங்கையுவுடன் சி.ஐ.ஆர்.ஏ.டி. எவ்வாறு இணைந்து செயற்பட முடியும் என்பன குறித்து பயனுள்ள கலந்துரையாடலொன்று நடைபெற்றது. சி.ஐ.ஆர்.ஏ.டி. மற்றும் இலங்கையில் உள்ள தென்னை, பனை, ரப்பர் மற்றும் தேயிலை உள்ளிட்ட விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே கலந்துரையாடலொன்று மெய்நிகர் தளத்தில் ஏற்பாடு செய்யப்படும்.

பிரெஞ்சு விவசாய ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு அமைப்பான சி.ஐ.ஆர்.ஏ.டி., வெப்பமண்டல மற்றும்  மத்திய  தரைக்கடல் பகுதிகளின் நிலையான அபிவிருத்திக்காக பணியாற்றுகின்றது.

பிரெஞ்சு அரசாங்கத்திற்கும் அதன் அபிவிருத்தி நிறுவனங்களுக்கும் இடையிலான நீண்டகால உறவை  தூதுவர்  ஹிரிம்புரேகம பாராட்டினார். முந்தைய ஆராய்ச்சி ஒத்துழைப்புக்களில் சி.ஐ.ஆர்.ஏ.டி. அளித்த ஆதரவை தூதுவர் மேலும் பாராட்டினார். இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் வகையில் இலங்கை விவசாயத் துறையை மாற்றுவதற்கு ஜனாதிபதி எடுத்த முயற்சிகளை சி.ஐ.ஆர்.ஏ.டி. யின் தலைமை நிறைவேற்று அதிகாரி பாராட்டினார்.

சி.ஐ.ஆர்.ஏ.டி. யின் பொது விவகாரங்கள் தலைவர் திருமதி. எமிலி கிளாண்டர், உற்பத்தி அமைப்புக்கள்  செயற்றிறன் பணிப்பாளர் திரு. பிரான்சுவா கோட் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் மற்றும் சி.ஏ.பி, ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் மற்றும்  பிரெஞ்சு விவசாய அமைச்சரின் ஆலோசகர் திரு. சில்வைன் மேஸ்ட்ராச்சி ஆகியோருடனான சந்திப்பு தூதுவர் ஹிரிம்புரேகம மற்றும் இரு தரப்பு அதிகாரிகளின் பங்கேற்புடன் செப்டம்பர் 09ஆந் திகதி நடைபெற்றது.

இயற்கை / உயிரியல் உரங்கள், பெறுமதி சேர்த்தல் மற்றும் விவசாய சுற்றுலா குறித்த இலங்கையின்  நோக்கை  அமைச்சர் விளக்கினார். உணவு மற்றும் தயாரிப்பு விரயத்தை குறைத்தல், விவசாயமயமாக்கல் மாற்றம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப நிபுனத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பரஸ்பரம் ஆர்வமுள்ள பகுதிகள் குறித்;த கருத்துக்களை அதிகாரிகள் மேலும் பரிமாறிக்கொண்டனர்.

பனைத் தயாரிப்புத் திணைக்களத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில்   உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை நேரடியாக மேம்படுத்தும் திட்டங்களை பனை உற்பத்தித் துறை எவ்வாறு தொடங்கியுள்ளது என்பது அமைச்சரால் விளக்கப்பட்டது.

நிறுவனங்களின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் செயற்றிறன் பொதுப் பணியகத்தின் தலைவர் திருமதி. பிரான்சுவா சைமன், தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பொறுப்பாளரான பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் செயற்றிறன் பொதுப் பணிப்பாளர் திருமதி. கிறிஸ்டின் ஃபோர்டின் பிரெஞ்சு விவசாய அமைச்சரின் தரப்பில் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதுடன், இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகம, பனை அபிவிருத்தி  சபையின் தலைவர் திரு. கிரிசாந்த பத்திராஜ, இரண்டாம் செயலாளர் திருமதி. துலாஞ்சி ஹேரத், மூன்றாவது செயலாளர் திரு. அமில திசாநாயக்க, இலங்கைத் தூதரகத்தின் உரைபெயர்ப்பாளர் திரு. நிக்கோலஸ் கிரெடின், திருமதி. ஹெலோயிஸ் டிம்ப்ரே மற்றும் இலங்கை விவசாயத் தயாரிப்புக்கள் ஏற்றுமதியாளர் திரு. பஸ்டியன் பியூஃபோர்ட் ஆகியோர் இலங்கைத் தரப்பில் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டனர்.

இலங்கைத் தூதரகம்,

பிரான்ஸ்

2021 அக்டோபர் 01

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close