வியன்னாவில் நடைபெற்ற விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்தின் 3வது விஞ்ஞான இராஜதந்திரக் கருத்தரங்கின் உயர்மட்ட அமர்வில் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன முக்கிய உரை

வியன்னாவில் நடைபெற்ற விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்தின் 3வது விஞ்ஞான இராஜதந்திரக் கருத்தரங்கின் உயர்மட்ட அமர்வில் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன முக்கிய உரை

வியன்னாவில் நடைபெற்ற விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்தின் 3வது விஞ்ஞான இராஜதந்திரக் கருத்தரங்கின் உயர்மட்ட  தொடக்க அமர்வில் வியன்னாவின் அழைப்பின் பேரில் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன சிறப்புரை ஆற்றினார். விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்தின் நிறைவேற்று செயலாளர் கலாநிதி ரொபர்ட் ஃப்லொய்ட், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் சபா கொரோசி, யு.எஸ்.ஜி மற்றும் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதி இசுமி நகாமிட்சு மற்றும் இடை-நாடாளுமன்ற ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் மார்ட்டின் சுங்கோங் ஆகியோர் .ந்த உயர்மட்ட அமர்வில் இடம்பெற்றிருந்த ஏனைய பேச்சாளர்களாவர்.

தனது முக்கிய உரையில், அணு ஆயுதப் பரிசோதனைகள் இல்லாத உலகை நோக்கி முன்னேறி, ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு நிலுவையில் உள்ள விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்தின் சாதனைகளை வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன பாராட்டினார். 1996 முதல் விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்தில் முன்கூட்டியே கைச்சாத்திட்டதன் மூலம் அணு ஆயுதப் பரிசோதனைகள் இல்லாத உலகத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை செயலாளர் விஜேவர்தன எடுத்துரைத்தார். பல்லேகலவில் உள்ள துணை நில அதிர்வு நிலையத்துடனான வசதி ஒப்பந்தத்தின் மூலமாக, விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்தின் சரிபார்ப்பு முறையிலும் இலங்கை பங்கேற்கின்றது.

இந்தக் கருத்தரங்கில் விஞ்ஞானிகள், வல்லுநர்கள், சிவில் சமூகம் மற்றும் தூதுவர்கள் உட்பட சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கருத்தரங்கிற்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில் வியன்னாவிலுள்ள இலங்கைத் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி மஜிந்த ஜயசிங்க, தூதரக ஊழியர்கள் மற்றும் இலங்கையின் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்குவர்.

இந்தக் கருத்தரங்கின் பக்க அம்சமாக, விரிவான அணுசக்தி பரிசோதனைத் தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்றுச் செயலாளர் கலாநிதி ரொபர்ட் ஃப்லொய்டை சந்தித்த வெளியுறவுச் செயலாளர், ஒப்பந்தம் தொடர்பாக பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன, சர்வதேச அணுசக்தி முகவரமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபேல் மரியானோ க்ரோசியையும் சந்தித்து, 2019-2025க்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட சர்வதேச அணுசக்தி முகவரமைப்பின் நேரடித் தொழில்நுட்ப ஆதரவு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றிற்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

வியன்னாவிலுள்ள இலங்கைத் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான மஜிந்த ஜயசிங்க மற்றும் தூதரக ஊழியர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 டிசம்பர் 09

 

Please follow and like us:

Close