வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால்,  இலங்கை மற்றும்  வியட்நாம் இற்கான இருதரப்பு முதலீட்டு ஊக்குவிப்புக்கான வலையரங்கம் ஏற்பாடு

வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால்,  இலங்கை மற்றும்  வியட்நாம் இற்கான இருதரப்பு முதலீட்டு ஊக்குவிப்புக்கான வலையரங்கம் ஏற்பாடு

 

இலங்கைத் தூதரகம், இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் வியட்நாமின் வெளிநாட்டு முதலீட்டு முகவர் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இருதரப்பு முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான வலையரங்கம் ஒன்றை 2023 செப்டம்பர் 14 அன்று மெய்நிகர் முறையில், பதிவுசெய்த 52 பங்கேற்பாளர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்தது.

தூதுவர் கலாநிதி சாஜ் யூ. மெண்டிஸ், விருந்தினரை வரவேற்றத்துடன், கிழக்கு மற்றும் மேற்கு சந்தைகளை இலகுவாக அணுகக்கூடிய இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தை கருத்தில் கொண்டு, இத்தருணத்தில் இலங்கையில் முதலீடு செய்வது எவ்வாறு வியட்நாமிய முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் என்பதை, விளக்கியதுடன், கல்வியறிவு மற்றும் தகவமைப்புடன் கூடிய போட்டி ஊதிய விகிதத்தில் பணிபுரியும் தொழிற்படை, வர்த்தக உடன்படிக்கைகள் இலங்கைக்கு மாத்திரமன்றி இந்தியா, பாகிஸ்தான்,  ஐரோப்பிய ஒன்றியம், சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சந்தை அணுகலை வழங்கும் புதிய வர்த்தக உடன்படிக்கைகளுடன் மேற்கொள்ளப்படவுள்ளது என்பதையும் வலியுறுத்தினார். நாடு தனது பொருளாதார சவால்களில் இருந்து விரைவாக மீண்டு வருவதற்கு இதுவே சிறந்த நேரம் என்பதை குறிப்பிட்டு, வியட்நாம் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்குமாறு கோரிக்கை  விடுத்தார்.

இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம் வீரகோன் உரையாற்றுகையில், வியட்நாம் முதலீட்டாளர்களுக்கு, இலங்கை முதலீட்டு வாரியம் (BOI)  பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதை உறுதி செய்ததையடுத்து, இலங்கை முதலீட்டுச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரசஞ்சித் விஜயதிலக்க, இலங்கையின் முதலீட்டு கொள்கைகள், வாய்ப்புகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விரிவான விளக்கமொன்றை முன்வைத்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் நிதிச் சேவைகள் மற்றும் இணக்ககத்திற்கான, பணிப்பாளர் ரேவன் விக்கிரமசூரிய அவர்கள் துறைமுக நகரத்தில் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கள் குறித்து தனது கருத்துக்களை முன்வைத்தார்.

வியட்நாமின் வெளிநாட்டு முதலீட்டு முகவர் நிறுவன (FIA) முதலீட்டு ஊக்குவிப்பு மையத்தின் இயக்குநர் Do Quynh Nga, வியட்நாமில் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகள், ஊக்கத்தொகைகள் வியட்நாமில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் முதலீட்டுச் சலுகைகள் குறித்து விளக்கமளித்ததுடன், திட்டமிடல் மற்றும் முதலீடுகள் அமைச்சிற்குரிய, பொருளாதார வலய முகாமைத்துவத் திணைக்களத்தின், பிரதி பணிப்பாளர் நாயகம், Tran Quoc Trung, வியட்நாமிலுள்ள விக்ஷேட பொருளாதார வலயங்களில், வழங்கப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் மாற்றும் சலுகைக் கொடுப்பனவுகள் குறித்த விளக்கவுரையொன்றையும் வழங்கினார்.

இலங்கை தூதரகத்தின் (வணிக) அமைச்சர் கிஷானி விக்கிரமசிங்க, நிறைவுரையாற்றுகையில், ஊக்கத்தொகை, வழிகாட்டுதல்கள் போன்ற தகவல்களை வழங்குவதன் மூலமும், இலங்கையில் உள்ள தொடர்புடைய நிறுவனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலமும் ஆர்வமுள்ள எந்தவொரு முதலீட்டாளருக்கும் ஆதரவளிக்கத் தூதரகம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் வியட்நாமிய முதலீட்டாளர்களிடம்,   இலங்கையை தங்களது, முதலீட்டு இடமாக கருதி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இலங்கை தூதரகம்

ஹா நோய்

18 செப்டம்பர் 2023

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close