வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புகளில் சர்வதேச முதலியார் மற்றும் பிள்ளைமார் சங்கம் இலங்கையுடன் கைகோர்ப்பு

வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புகளில் சர்வதேச முதலியார் மற்றும் பிள்ளைமார் சங்கம் இலங்கையுடன் கைகோர்ப்பு

இலாப நோக்கற்ற, அரசியல் சார்பற்ற அமைப்பான தென்னிந்தியாவை தளமாகக் கொண்ட சர்வதேச முதலியார் மற்றும் பிள்ளைமார் சங்கம், உலகளவில் 25000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. சர்வதேச முதலியார் மற்றும் பிள்ளைமார் சங்கம் தென்னிந்திய வம்சாவளியைக் கொண்ட புகழ்பெற்ற வணிக உரிமையாளர்களைக் கொண்டுள்ளதுடன், தென்னிந்தியாவில் உள்ள கிராமப்புற சமூகங்களில் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய அபிவிருத்திகளில் ஈடுபட்டுள்ளது.

2022 பெப்ரவரி 18ஆந் திகதி சான்சரி வளாகத்தில் நடைபெற்ற 'இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புக்கள்' என்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரன் சர்வதேச முதலியார் மற்றும் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட சுமார் 60 வணிக உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பிரதான உரையை ஆற்றிய பிரதி உயர்ஸ்தானிகர், இலங்கையில் முதலீடு செய்வதற்கான காரணங்களை வலியுறுத்தினார். 'இலங்கையில் முதலீடு செய்யும் வழிகள்' மற்றும் 'இலங்கை - முன்னோக்கிச் செல்லும் பாதை' பற்றிய விளக்கக்காட்சிகள் இரண்டாவது செயலாளர் (வர்த்தகம்) திலங்க ஹெட்டியாராச்சி மற்றும் இரண்டாவது செயலாளர் (கலாச்சார மற்றும் அரசியல்) சுபுன் தேசபிரேமவினால் காண்பிக்கப்பட்டது.

நிகழ்வைத் தொடர்ந்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மருந்துப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஆடை மற்றும் தகவல் தொழினுட்பம் / பி.பி.ஓ. போன்ற துறைகளில் முதலீடு செய்வது மற்றும் புதிய வணிகங்களை நிறுவுவது தொடர்பாக பல நேர்மறையான பதில்களைப் பெற்ற கேள்வி பதில் அமர்வும், ஊடாடும் மதிய உணவு விருந்தும் இடம்பெற்றன.

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,

சென்னை

2022 பிப்ரவரி 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close