லிச்சென்ஸ்டைன் இளவரசாட்சிப்பகுதியுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

லிச்சென்ஸ்டைன் இளவரசாட்சிப்பகுதியுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கைக்கும் லிச்சென்ஸ்டைன் இளவரசாட்சிப்பகுதிக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த இந்த முன்மொழிவு தொடர்பான அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

மேற்கு ஐரோப்பா பிராந்தியத்தைச் சேர்ந்த லிச்சென்ஸ்டைன் இளவரசாட்சிப்பகுதி சுவிட்சர்லாந்திற்கும் ஒஸ்ட்ரியாவிற்கும் இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய மக்கள் தொகை கொண்ட நாடாகும். 1961 ஏப்ரல் 18ஆந் திகதிய இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா சாசனத்தின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 பிப்ரவரி 01

Please follow and like us:

Close