லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகள் நிறுவகத்தின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பு

லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகள் நிறுவகத்தின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பு

லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகள் நிறுவகத்தின் புதிய நிறைவேற்றுப்  பணிப்பாளராக வெளிநாட்டு அமைச்சர் மற்றும் நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸால் தூதுவர் தயந்த லக்சிரி மெண்டிஸ் நியமிக்கப்பட்டார். கடந்த புதன்கிழமை (15) கொழும்பில் உள்ள நிறுவக வளாகத்தில் வைத்து தூதுவர் மெண்டிஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். சபை உறுப்பினர்களான திருமதி. சுகந்தி கதிர்காமர் மற்றும் திரு. கோசல விக்கிரமநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திரப் பயிற்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் தூதுவர் பமீலா டீன், லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் திரு. சேனாநாயக்க மற்றும் வெளிநாட்டு அமைச்சரின் அலுவலகத்தின் பிரதிநிதிகள் இந் நிகழ்வில் மேலும் கலந்து கொண்டனர்.

 வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 செப்டம்பர் 16

 

Please follow and like us:

Close