பட்டிக், கைத்தறி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்திகளுக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ. தயாசிறி ஜயசேகர அவர்களது தலைமையிலான தூதுக்குவுடன், தூதுவர் மாண்புமிகு பேராசிரியர் ஜனிதா அபேவிக்ரம லியனகே 2022 ஜனவரி 24ஆந் திகதி ரஷ்ய சர்வதேச ஒத்துழைப்பு சங்கத்திற்கு விஜயம் செய்தார். தூதுக்குழுவினரை ரஷ்யா-இலங்கை நட்புறவுச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு. விளாடிமிர் பொலோஸ்கோவ் மற்றும் சபை உறுப்பினர் திருமதி. மெரினா கொரோஸ்டெலேவா ஆகியோர் வரவேற்றனர்.
ரஷ்ய அதிதிகளுக்கு பரந்தளவில் பட்டிக், கைத்தறி மற்றும் ஏனைய ஆடைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான கருத்துக்களை இராஜாங்க அமைச்சர் கௌரவ. தயாசிறி ஜயசேகர, தூதுவர் மாண்புமிகு பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே மற்றும் உப தலைவர் திரு. வி. பொலோஸ்கோவ் ஆகியோர் பரிமாறிக்கொண்டனர். ரஷ்ய அருங்காட்சியகங்கள் மற்றும் காட்சிக் கூடங்களில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல், பெரிய அளவிலான ஆடைத்துறைக் கண்காட்சிகளில் இலங்கையின் பங்கேற்பு மற்றும் ரஷ்ய வர்த்தக நாமங்களை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புக்கள் குறித்து தரப்பினர்கள் வலியுறுத்தினர்.
ஆடைத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான பரஸ்பர நன்மை பயக்கும் பகுதிகள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இலங்கைத் தூதரகம்,
ரஷ்யக் கூட்டமைப்பு
2022 பிப்ரவரி 2