மொசாம்பிக் நிலையான எரிசக்தித் துறையின வாய்ப்புக்கள் குறித்த தொழில்நுட்ப நிலைக் கூட்டம் நிறைவு

 மொசாம்பிக் நிலையான எரிசக்தித் துறையின வாய்ப்புக்கள் குறித்த தொழில்நுட்ப நிலைக் கூட்டம் நிறைவு

தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் மொசாம்பிக் வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து 2022 ஜூலை 08ஆந் திகதி இரண்டாவது (தொழில்நுட்ப நிலை) கூட்டத்தை, மொசாம்பிக் கனிம வளங்கள் மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் ஃபூனே (எரிசக்தி நிதியம்) இன் முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் மற்றும் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (நீர்மின்சக்தி, சூரிய மற்றும் காற்று) விநியோக நிறுவனங்களின் நிபுணர்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்பாடு செய்தது. இந்த சந்திப்பு 2022 மே 10ஆந் திகதி மொசாம்பிக் மற்றும் இலங்கை அமைப்புக்களுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது முகாமைத்துவ மட்ட சந்திப்பின் தொடர்ச்சியாகும்.

2022இல் மொசாம்பிக்கில் இயற்றப்பட்ட புதிய மின்சாரச் சட்டத்தை விளக்கிய கனிம வளங்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் பிரதி தேசியப் பணிப்பாளர் மார்சிலினா மாடவியா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் கட்டற்ற ஆற்றல் வழங்கல் மீதான தனியார் துறை அணுகல் ஆகியவை தொடர்பிலான கவனத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார். தேவையான சட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், 2020 -2024 ஆம் ஆண்டுக்கான 600 மெகாவெட் மின்சாரத்தை உருவாக்கும் திட்டத்தைக் காட்டும் 'மொசாம்பிக்கில் நிலையான எரிசக்தி திட்ட வாய்ப்புக்கள்' பற்றிய விளக்கக்காட்சியை வழங்கிய அவர், 200 மெகாவெட் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து கிடைக்கும் எனக் குறிப்பிட்டார். உலகளாவிய அணுகலுக்கான தேசிய இலக்கு, 60% கட்டம் மற்றும் 30% கட்டத்திற்கு அப்பாற்பட்ட அமைப்புகளின் மூலமாக அமையும்.

இலங்கைத் தரப்பில் இருந்து சிறிய நீர் மின்சக்தி சங்கத்தின் தலைவர் துசித பெரிஸ், காற்றாலை சக்தி சங்கத்தின் செயலாளர் மஞ்சுள பெரேரா, சூரிய சக்தி சங்கத்தின் லசித் விமலசேன மற்றும் நிலையான எரிசக்தி அதிகாரசபையின் தலைவர் ரஞ்சித் சேபால ஆகியோர் விளக்கக்காட்சிகளை வழங்கினர். இலங்கையில் செயற்படும் நீர், காற்று மற்றும் சூரிய சக்தி திட்டங்கள், ஏனைய ஆபிரிக்க நாடுகளில் (மலாவி, உகாண்டா, சாம்பியா, சிம்பாப்வே, ருவாண்டா மற்றும் கென்யா) அமைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் இலங்கை வசதிகள் மற்றும் மின்மாற்றி கட்டுமானத் துறைகளின் ஆதரவு குறித்த இந்த விளக்கக்காட்சிகள் கவனம் செலுத்தின. மொசாம்பிக் பங்கேற்பாளர்கள், பொறியியல் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் மொசாம்பிக்கிற்கு வழங்கக்கூடிய இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோக நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இலங்கை நிறுவனங்கள் மொசாம்பிக் தேசிய எரிசக்தித் திட்டம், வள வரைபடங்கள், எரிசக்தி விநியோக வலையமைப்பு, உள்ளூர் மற்றும் வெளி நிதிகள், நில இருப்பு மற்றும் ஒதுக்கீட்டுக் கொள்கைகள், பல அனுமதிகளைப் பெறுவதற்கான ஒரே இடத்தில் உள்ள வகை ஒருங்கிணைப்பு, ஏனைய வணிக நட்பு நடவடிக்கைகள், அமெரிக்க டொலருடன் இணைக்கப்பட்ட கட்டணக் கட்டமைப்புக்கள் மற்றும் இரட்டை வரிவிதிப்பு நிவாரணம் பற்றிய தகவல்களைக் கோரின. பதில்கள் மற்றும் விரிவான ஆதார வரைபடங்கள், வலையமைப்பு வரைபடங்கள் மற்றும் மேலதிக தகவல்களை வழங்கக்கூடிய ஏனைய அரச நிறுவனங்களுக்கான தொடர்புகளை கனிம வளங்கள் மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் ஃபுனே நிபுணர் குழு வழங்கியது.

இலங்கைக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க, மொசாம்பிக் நாட்டில் உள்ள முக்கிய அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களைச் சந்திப்பதற்காக, இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களின் வருகையை எளிதாக்குவதற்கு மொசாம்பிக் தரப்பு ஒப்புக்கொண்டது.

இந்தக் கூட்டத் தொடரை ஒழுங்கமைப்பதில் கடுமையாக உழைத்தமைக்காக, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் இந்துமினி கொடிக்கார, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உதவிப் பணிப்பாளர் குமுதினி இருகல்பண்டார, தூதரகத்தின்இரண்டாம் செயலாளர் - வர்த்தகம் சஞ்சீவ பண்டார மற்றும் மொசாம்பிக் வர்த்தக சபை உறுப்பினர் ஹிப்போலிட்டோ ஹமேலா ஆகிNயுhருக்கு பிரிட்டோரியாவிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் பேராசிரியர் காமினி குணவர்தன நன்றி தெரிவித்தார். இலங்கை நிறுவனங்களுக்கு மொசாம்பிக்கில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்களை வழங்கும் முக்கிய தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தரப்பினருக்கு வழிவகுத்த பங்கேற்பு மற்றும் தொழில்முறை விளக்கக்காட்சிகளுக்காக கனிம வளங்கள் மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் ஃபுனே நிபுணர்கள் மற்றும் இலங்கை நிபுணர்களுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மொசாம்பிக் கனிம வளங்கள் மற்றும் எரிசக்தி அமைச்சு, இலங்கை சிறு நீர்மின் சங்கம், இலங்கை காற்றாலை சக்தி சங்கம் மற்றும் இலங்கை சூரிய சங்கம் ஆகியவற்றால் செய்யப்பட்ட வீடியோ விளக்கக்காட்சிகள் கோரிக்கையின் பேரில், trade.pretoria@gmail.com இல் கிடைக்கின்றன.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

பிரிட்டோரியா

2022 ஜூலை 21

Please follow and like us:

Close