மேற்கு ஆசியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள போர்நிறுத்த அறிவிப்பிற்கு இலங்கையின் வரவேற்பு

மேற்கு ஆசியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள போர்நிறுத்த அறிவிப்பிற்கு இலங்கையின் வரவேற்பு

மேற்கு ஆசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பை இலங்கை பெரிதும் வரவேற்கிறது.

இந்நடவடிக்கையை, பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலைகளைத் தணிப்பதற்கும், ஆழ்ந்த மனிதத் துயரத்தைப் போக்குவதற்குமானதொரு  முன்னேற்றப்படியாக அங்கீகரிக்கும் அதே வேளையில், பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நீண்டகால ஸ்திரத்தன்மையையும், பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையிலானதும், அனைவரையும் உள்ளடக்கியதானதுமான சமாதான செயன்முறையின் மூலம் நிரந்தரமான மற்றும் நீடித்த தீர்வை நோக்கிச் செயற்பட, இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் நாம் ஊக்குவிக்கிறோம்.

பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான இம்முயற்சியை எளிதாக்குவதில் முக்கியப் பங்காற்றிய அனைத்துத் தரப்பினரின் இராஜதந்திர முயற்சிகளையும், ஈடுபாட்டையும் இலங்கை பெரிதும் பாராட்டுகிறது.

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலத்துறை அமைச்சு
கொழும்பு 01

 2026, ஏப்ரல் 11

 

Please follow and like us:

Close