முதல் முறையாக இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தோனேசியா பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டப்படிப்பு புலமைப்பரிசில்

முதல் முறையாக இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தோனேசியா பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டப்படிப்பு புலமைப்பரிசில்

இந்தோனேஷியா பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு இராஜதந்திரம் (சர்வதேசம்) முதுமாணி  பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்த இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளான லெப்டினன்ட் கேர்னல் ஜனக ரணவீர மற்றும் லெப்டினன்ட் கேர்னல் கோசல விஜேகோன் ஆகியோர் இந்தோனேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் யசோஜ குணசேகரவை ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் வைத்து 2021 செப்டம்பர் 02ஆந் திகதி மரியாதை நிமித்தம் சந்தித்தனர். இலங்கை இராணுவப் பயிற்சி வரலாற்றில் இந்தோனேசியா பாதுகாப்புப் பல்கலைக்கழகம் முதுமாணி பட்டப்படிப்பை பின்பற்றுவதற்காக இலங்கை இராணுவத்திற்கு புலமைப்பரிசில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பில் அமைச்சர் ஆலோசகர் (பாதுகாப்பு) கொமடோர் நளீந்திர ஜயசிங்கவும் கலந்து கொண்டார்.

தொழிற்துறை, இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதித் திட்டங்களுக்கான தொடக்க விழாவை இந்தோனேசியக்  குடியரசின் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் 2021 ஆகஸ்ட் 30ஆந் திகதி செந்துல் போகோரில் உள்ள இந்தோனேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக விழாக் களத்தில் நடாத்தியது. இந்தோனேஷியக் குடியரசின் பாதுகாப்புத் பிரதி அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மத் ஹெரீந்திரா இந்த விழாவில் கலந்து கொண்டார். பிரதி அமைச்சருடன் இந்தோனேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பிரதி அட்மிரல் பேராசிரியர் கலாநிதி. அமருல்லா ஒக்டேவியன் இணைந்திருந்தார். முதுமாணித் திட்டத்திற்கான புலமைப்பரிசில்களைப் பெற்ற இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளும் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

இலங்கை (2 இராணுவ அதிகாரிகள்), நைஜீரியா (2 இராணுவ அதிகாரிகள் மற்றும் 1 அரசாங்க அதிகாரி), பாகிஸ்தான் (1 இராணுவ அதிகாரி), சிம்பாப்வே (1 இராணுவ அதிகாரி மற்றும் 2 பொலிஸ் அதிகாரிகள்) மற்றும் லாவோஸ்  மக்கள் ஜனநாயகக் குடியரசு (2 இராணுவ அதிகாரிகள்) ஆகிய 5 நட்பு நாடுகளைச் சேர்ந்த 11 புலமைப்பரிசில் பெற்ற அதிகாரிகள் இந்தத் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

இலங்கைத் தூதரகம்

ஜகார்த்தா

2021 செப்டம்பர் 07

Please follow and like us:

Close