'மீண்டும் வணக்கம்' - மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வை ஏற்பாடு

 ‘மீண்டும் வணக்கம்’ – மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வை ஏற்பாடு

மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022ஆம் ஆண்டிற்கான அதன் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக சுற்றுலா நடத்துனர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

2022 ஏப்ரல் 01 முதல் மலேசியா தனது எல்லைகளைத் திறந்து, உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் அத்தியாவசியமற்ற பயணங்களை அனுமதிக்கும் அதே நேரத்தில் கடுமையான சுகாதார நெறிமுறைகளும் நீக்கப்படும். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 மார்ச் 15ஆந் திகதி மலேசியா தனது எல்லைகளை மூடியதிலிருந்து இரண்டு முழுமையான நாட்காட்டி ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியக் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும்.

இலங்கையை தமக்கு விருப்பமான பயண இடமாக தெரிவு செய்ய மலேசியர்களை ஊக்குவிப்பதற்காக இது மிகவும் பொருத்தமான நேரமாக இருக்கும் என்பதால், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடன்இணைந்து, 2022 மார்ச் 29ஆந் திகதி உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள கூட்டாட்சிப் பிராந்தியத்தில் செயற்படும் சுமார் 50 சுற்றுலா இயக்குனர்களுக்கான விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சியை உயர்ஸ்தானிகராலயம் நடாத்தியது.

பங்கேற்பாளர்களை வரவேற்ற நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் சுமங்கல டயஸ், இலங்கையின் புகழ்பெற்ற அரவணைப்பு மற்றும் விருந்தோம்பல் அதன் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது எனக் குறிப்பிட்டார். பன்முகத்தன்மை கொண்ட ஒரு தீவான இலங்கை, பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல மகிழ்ச்சிகரமான மற்றும் மாறுபட்ட அம்சங்களை வழங்குகின்றது என அவர் வலியுறுத்தினார்.

காடு, வினோதம், இயற்கை, பாரம்பரியம், பண்டிகை, பேரின்பம், ஆரோக்கியம், பழைமை மற்றும் பல துணை வகைகளின் கீழ் இந்த நிகழ்ச்சி மிகவும் விரிவான விளக்கக்காட்சியை உள்ளடக்கியிருந்தது. இலங்கைக்கான அணுகல், உள்நாட்டுப் போக்குவரத்து, தங்குமிடம், சுகாதார நெறிமுறைகள், இலங்கை உணவு வகைகள் மற்றும் பாரம்பரியங்கள் போன்றவையும் சுட்டிக் காட்டப்பட்டன.

மலேசியாவிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நாட்டுப் பிரதிநிதி, இலங்கையின் தேசிய விமான நிறுவனத்தின் சேவைகள் மற்றும் மலேசியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு வழங்கும் நன்மைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார்.

நிகழ்வை கலகலப்பாகவும் துடிப்பாகவும் வைத்திருக்க பல விளம்பர வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டன. இலங்கையை சித்தரிக்கும் சுவரொட்டிகளும் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டன. பங்கேற்பாளர்களுக்கு இலங்கையின் ஆடம்பரமான உணவு வகைகளும் வழங்கப்பட்டன.

பங்கேற்பாளர்களை இலங்கை சகாக்களுடன் இணைப்பதற்கான உறுதிமொழி மற்றும் பரஸ்பரம் திருப்திகரமான நன்மைகளை நோக்கி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவுற்றது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

கோலாலம்பூர்

2022 ஏப்ரல் 01

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close