மியன்மார் அரசாங்கம் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை

மியன்மார் அரசாங்கம் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை

170 மில்லியன் ரூபா (அண்ணளவாக 463,215 அமெரிக்க டொலர்) பெறுமதியான 1000 மெட்ரிக்  தொன் மியன்மார் வெள்ளை அரிசியை 2022 செப்டெம்பர் 02ஆந் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு மியன்மார் அரசாங்கம் நன்கொடையாக வழங்கியது.

மியன்மாரின் யாங்கூனில் உள்ள ஆசிய உலக துறைமுக முனையத்தில் நடைபெற்ற கையளிக்கும் நிகழ்வில், மியன்மார் மத்திய வர்த்தக அமைச்சர் யு. ஆங் நைங் ஓவினால், மியன்மாருக்கான  இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவிடம் இந்தச் சரக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இச்சலுகையை ஏற்றுக்கொண்ட தூதுவர் ஜனக பண்டார, சவாலான நேரத்தில் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியமைக்காக மியன்மார் அரசாங்கத்திற்கும்  மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

2022 ஜூன் 07ஆந் திகதி நடைபெற்ற நற்சான்றிதழ் வைபவத்தின் போது மியன்மாரின் சிரேஷ்ட பொது அமைச்சர் ஆங் ஹ்லேயிங்கிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்த போதும், மற்றும்  இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 73வது ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் போதும் தூதுவர் ஜனக பண்டார விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சரக்கு 2022 செப்டெம்பர் 04ஆந் திகதி அனுப்பப்பட்டதுடன், 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும்.

இலங்கைத் தூதரகம்,

யாங்கோன்

2022 செப்டம்பர் 06

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close