மாலைதீவுக்கான நியமனம் செய்யப்பட்ட இலங்கையின் உயர்ஸ்தானிகர் தனது நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை மாலேயில் உள்ள வெளிவிவகார அமைச்சிடம் கையளிப்பு

மாலைதீவுக்கான நியமனம் செய்யப்பட்ட இலங்கையின் உயர்ஸ்தானிகர் தனது நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை மாலேயில் உள்ள வெளிவிவகார அமைச்சிடம் கையளிப்பு

2022 ஜனவரி 25ஆந் திகதி மாலே வந்தடைந்த மாலைதீவுக்கான நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே.சாதிக், அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்ட எளிமையான விழாவின் பின்னர், அதே தினத்தில் மாலேயில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அடுத்த நாள், 2022 ஜனவரி 26ஆந்திகதி, நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் சாதிக் தனது நற்சான்றிதழின் திறந்த பிரதியை மாலேயில் உள்ள வெளியுறவு அமைச்சில் வைத்து உபசரணைப் பிரிவின் தலைவரான தூதுவர் ஐஷாத் ஷான் ஷாகிரிடம் ஒப்படைத்தார்.

இந்த சந்திப்பின் போது, கல்வி, சுகாதாரம் மற்றும் முதலீடு போன்ற இருதரப்பு நலன் சார்ந்த பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. தனது நற்சான்றிதழின் திறந்த பிரதியை முன்வைப்பதற்காக முன்கூட்டிய சந்தர்ப்பமொன்றை வழங்கியமைக்காக உபசரணைப் பிரிவின் தலைவருக்கு நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் நன்றிகளைத் தெரிவித்ததுடன், இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நல்லுறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அதன்பின்னர்,இணைச் செயலர் கதீஜா நஜீஹாவைச் சந்தித்த நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் சாதிக், இந்த வருடம் கொழும்பில் இலங்கை - மாலைதீவு கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கு முன்னர், குறிப்பாக இரட்டை வரி விதிப்பைத் தவிர்த்தல், இருதரப்பு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் சுங்க விடயங்களிலான நிலுவையில் உள்ள பல இருதரப்பு ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முன்கூட்டியே இறுதி செய்வது குறித்து கலந்துரையாடினார்.

மேற்படி சந்திப்புக்களில், நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகருடன் பதில் உயர்ஸ்தானிகர் டி. அமானுல்லாவும் இணைந்திருந்தார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

மாலி

2022 ஜனவரி 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close