மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற  நிலைமை  மற்றும் பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் 

மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற  நிலைமை  மற்றும் பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் 

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய மோதலின் தீவிரம் குறிப்பாக லெபனானில் ஒரு நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இப்பிராந்தியத்தில் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையர்கள் பணிபுரிவதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பாதுகாப்பையும், நலனையும் உறுதிப்படுத்த ஏற்கனவே அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அறிவுறுத்தல்களும் இலங்கை தூதரகங்களால் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்கள் இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, அதற்கேற்ப செயற்படுமாறு கோரப்படுகிறார்கள்.

மேலும் மத்திய கிழக்கில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் தனது நெருங்கிய உறவினருக்கு அவசர நிலை ஏற்பட்டிருப்பின் அது பற்றிய தகவல்களுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி: 011 – 2338812/ 011 – 7711194)

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 அக்டோபர் 16

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close