போலந்து தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

 போலந்து தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற போலந்தின் தூதுவர் அடம் புராகோவ்ஸ்கி, வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2021 டிசம்பர் 8ஆந் திகதி, புதன்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து  கலந்துரையாடினார். இலங்கைக்கான லொட் பொலிஷ் எயார்லைன்ஸின் நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு, தூதுவர் புரகோவ்ஸ்கி கொழும்புக்கு விஜயம் செய்திருந்தார்.

இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 2022 இல் 65 வருடங்கள் நினைவுறுவதனை  கூர்ந்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், போலந்துடனான பன்முகப் பங்காளித்துவத்தை மேலும் முன்னேற்றுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முழுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் நோக்கில், அரசியல் மற்றும் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா உறவுகள் மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்கு இதன்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக, இரு நாடுகளினதும் வணிக சபைகளுக்கு இடையேயான வழக்கமான தொடர்புகளின் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை ஏற்றுமதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தையின் முக்கியத்துவத்தின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றிய - இலங்கை  ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் தூதுவருக்கு விளக்கமளித்தார். போலந்தின் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் இருவழி சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக 2022 இல் இலங்கையில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஒரு நிகழ்வு குறித்தும் தூதுவர் தெரிவித்தார்.

தூதுவர் இந்த விஜயத்தின் போது வெளிநாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகளையும் சந்தித்தார்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 டிசம்பர் 11

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close